சங்கராபுரம்

சங்கராபுரம் (ஆங்கிலம்:Sankarapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். சங்கராபுரம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

சங்கராபுரம்
—  பேரூராட்சி  —
சங்கராபுரம்
இருப்பிடம்: சங்கராபுரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°53′22″N 78°54′50″E / 11.8895°N 78.914°E / 11.8895; 78.914Coordinates: 11°53′22″N 78°54′50″E / 11.8895°N 78.914°E / 11.8895; 78.914
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கள்ளக்குறிச்சி
வட்டம் சங்கராபுரம் வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் எம். எசு. பிரசாந்த், இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி சங்கராபுரம்

வார்ப்புரு:சட்டமன்றத் தொகுதி/குறிப்புகள்

சட்டமன்ற உறுப்பினர்

டி. உதயசூரியன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

15,664 (2011)

1,350/km2 (3,496/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11.60 சதுர கிலோமீட்டர்கள் (4.48 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/sankarapuram

அமைவிடம்

சங்கராபுரம் பேரூராட்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது.இதன் கிழக்கில் திருக்கோவிலூர் 35 கிமீ; மேற்கில் கல்வராயன்மலை 35 கிமீ; வடக்கில் திருவண்ணாமலை 47 கிமீ;கள்ளக்குறிச்சி 18 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

11.60 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 41 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,539 வீடுகளும், 15,664 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.8%மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 935 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,304 மற்றும் 87 ஆகவுள்ளனர்.[4]

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=சங்கராபுரம்&oldid=40362" இருந்து மீள்விக்கப்பட்டது