சங்கத் தமிழ் (நூல்)

சங்கத் தமிழ் என்னும் நூல் மு. கருணாநிதி எழுதிய நூலாகும்.

நூலின் அமைப்பு

மு. கருணாநிதி இந்த நூலில் சங்க இலக்கியத்தில் உள்ள பொருத்தமான 100 பாடல்களுக்கு புதுக்கவிதையில் விளக்கக் கவிதைகளை எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு வண்ண ஓவியம் என்ற வீதத்தில் புகழ்பெற்ற ஓவியர்களைக்கொண்டு ஓவியம் புனையப்பட்டு உள்ளது. இதில் இறுதியில் உள்ள 11 பாடல்களில் ஒரு தலைக் காதல் என்னும் பெயரில் கற்பனை கலந்த குறுங்காவியமாக பொருத்தமான சங்க இலக்கிய பாடல்களுடன் எழுதியுள்ளார். இந்த விளக்கப் பாடல்கள் முதலில் குங்குமம் இதழில் வாரம் ஒரு பாடல் என்ற கணக்கில் வெளிவந்தது. பின்னர் நூல்வடிவமாக ராக்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ்(பி)லிட் பதிப்பகத்தின் வெளியீடாக 1987இல் வெளிவந்தது. மூன்றாம் பதிப்பாக நவம்பர் 1987இல் வெளிவந்தது.[1]

உசாத்துணை

  1. சங்கத் தமிழ், கலைஞர் மு.கருணாநிதி 1987 பதிப்பு.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சங்கத்_தமிழ்_(நூல்)&oldid=16352" இருந்து மீள்விக்கப்பட்டது