க. வேலாயுதம்

க. வேலாயுதம்
க. வேலாயுதம்.jpg
முழுப்பெயர் கனகசபை
வேலாயுதம்
பிறப்பு 17-11-1917
பிறந்த இடம் தம்பலகாமம்,
திருகோணமலை
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
வரலாற்றாளர்
கல்வி
மறைவு 19-05-2009
பெற்றோர் வே. கனகசபை,
தங்கம்

தம்பலகாமம் க வேலாயுதம் (நவம்பர் 17, 1917 - மே 19, 2009) ஈழத்தின் மூத்த எழுத்தாளர். திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். சிறந்த கவிஞர், வீரகேசரி பத்திரிகையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிருபராகப் பணியாற்றியவர்.

வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தம்பலகாமம் என்ற ஊரில் வே. கனகசபை, தங்கம் ஆகியோருக்கு வேலாயுதம் 1917 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சிறுவயது முதலே இசை, நாடகம், கூத்து என்பவற்றில் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பினை 5ம் வகுப்புக்கு மேல் தொடரமுடியாது போனது. இருந்தும் இடைவிடாத வாசிப்பு பழக்கமும், இயற்கையாகவே அமைந்த இலக்கிய ஆற்றலும் அவரை எழுத்துலகில் மிளிரவைத்தது.

எழுத்துலகில்

இவரது முதலாவது சிறுகதை சொல்லும் செயலும் குமுதம் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து இவரது கதைகள் காலச்சுடர், சிந்தாமணி, ஆத்மஜோதி போன்ற இதழ்களில் வெளிவந்தன. தம்பலகாமத்தைப் பின்னணியாகக் கொண்டு "ரங்க நாயகியின் காதலன்" என்னும் வரலற்றுப் புதினத்தையும், "தமிழ்கேட்க ஆசை" என்ற கட்டுரைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார். "இந்திய ஞானிகளின் தெய்வீகச் சிந்தனைகள்" என்ற ஆய்வு நூல் மிகவிரைவில் வெளியிடப்படவுள்ளது.

இவரது வாழ்க்கை வரலாற்றை விரித்துரைக்கும் 'தம்பலகாமம் க.வேலாயுதம்' என்ற நூலை சித்தி அமரசிங்கம் எழுதியுள்ளார்.

வெளியிட்ட நூல்கள்

  • ரங்கநாயகியின் காதலன் (குறுநாவல், ஈழத்து இலக்கியச்சோலை, திருகோணமலை)
  • தமிழ் கேட்க ஆசை (கட்டுரைத் தொகுப்பு, பொற்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம், தம்பலகாமம்)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=க._வேலாயுதம்&oldid=2540" இருந்து மீள்விக்கப்பட்டது