க. பத்மநாதன்

கனகசபை பத்மநாதன் (Kanagasabai Pathmanathan, 30 மே 1948 - 21 மே 2009) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

க. பத்மநாதன்
K. Pathmanathan
அம்பாறை மாவட்ட நாடாம்முமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2009
பின்னவர்தோமசு வில்லியம், ததேகூ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-05-30)30 மே 1948
இறப்பு21 மே 2009(2009-05-21) (அகவை 60)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வேலைஅரசு அதிகாரி

ஆரம்ப வாழ்க்கை

கனகசபை பத்மநாதன் அம்பாறை மாவட்டம், காரைதீவில் இளையதம்பி கனகசபை, சின்னத்தம்பி பத்மாவதி ஆகியோருக்குப் பிறந்தவர்.[1] தனது ஆரம்பக் கல்வியை காரைதீவு இராமகிருஷ்ண ஆண்கள் பாடசாலை, கல்முனை பாத்திமா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இலங்கைக் காவல்துறையில் பணியாற்றிய பின்னர் வவுனியா கட்டிடப்ப் பொருட்கள் திணைக்களத்தில் பணியாற்றினார்.[1] அரசியலுக்கு வரும் முன்னர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.[2]

அரசியலில்

பத்மநாதன் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களில் ஒருவராக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 29,002 விருப்பு வாக்குகள் பெற்று ததேகூ வேட்பாளர்களில் முதலாவதாக வந்து வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3]

பத்மநாதன் 2009 மே 21 அன்று சிறிது கால சுகவீனமற்ற நிலையில் மதுரையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "மண்ணை மாண்புறச்செய்த மைந்தரின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி". karaitivu.org. 4 சூன் 2013 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305101725/http://www.karaitivu.org/index.php/announcements/obituaries/462-mp. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2015. 
  2. 2.0 2.1 "TNA parliamentarian Kanagasabai passes away". தமிழ்நெட். 21 மே 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29422. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2015. 
  3. "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015514/http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf. 
"https://tamilar.wiki/index.php?title=க._பத்மநாதன்&oldid=24244" இருந்து மீள்விக்கப்பட்டது