க. சு. நவநீதகிருஷ்ண பாரதி

க. சு. நவநீதகிருஷ்ண பாரதி (1 மார்ச் 1889 - 22 திசம்பர் 1954)[1] ஈழத்துத் தமிழறிஞரும் புலவரும் ஆவார். இவர் இயற்றிய தனிச் செய்யுள்களின் தொகுப்பாகிய உலகியல் விளக்கம் என்னும் நூலின் பதிப்பாசிரியராய் விபுலாநந்த அடிகள் பணியாற்றியுள்ளார். அடிகளின் பதிகத்தினையும், கடவுள் வாழ்த்தினையும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட முன்னுரையினையும் கொண்டு 1922 இல் இந்நூல் வெளியிடப்பட்டது.[2] திருவாசகம், நன்னூல், திருமந்திரம் போன்ற நூல்களுக்கு உரை எழுதி இலங்கையில் மட்டுமன்றி இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பாராட்டுப் பெற்றார்.[3]

க. சு. நவநீதகிருஷ்ண பாரதி
க. சு. நவநீதகிருஷ்ண பாரதி
இயற்பெயர்/
அறியும் பெயர்
நவநீதகிருஷ்ண பாரதி
பிறந்ததிகதி (1889-03-01)1 மார்ச்சு 1889
பிறந்தஇடம் கரவட்டங்குடி, கிருஷ்ணாபுரம், தமிழ்நாடு
இறப்பு திசம்பர் 22, 1954(1954-12-22) (அகவை 65)
பணி தமிழாசிரியர், புலவர்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது தமிழறிஞர்
பெற்றோர் சுப்பிரமணிய பாரதி
துணைவர் சௌந்தரநாயகி
பிள்ளைகள் பத்மாவதி பூர்ணானந்தா

வாழ்க்கைச் சுருக்கம்

நவநீதகிருஷ்ண பாரதி தமிழ்நாடு, கிருஷ்ணாபுரம், கரவட்டங்குடியில் சுப்பிரமணிய பாரதி, தைலம்மை ஆகியோருக்குப் பிறந்தார்.[4] இராமசாமிப்‌ புலவரிடம்‌ தமிழ்‌ மொழியைக் கற்றார்‌. இளம் வயதில் இலக்கணம், இலக்கியம், தருக்கம் ஆகியவற்றைக் கற்றார். நாராயணசாமி ஐயரிடம்‌ சங்க இலக்கியங்களையும்‌, அரசஞ்சண்முகனாரிடம்‌ தொல்காப்பியத்தையும்‌ கற்றுத்‌ தேர்ந்தார்.[5] தனது பதினெட்டாவது வயதில்‌ பாலைக்காடு விக்டோரியாக்‌ கல்லூரியில்‌ தமிழ்ப்‌ பண்டிதராகப்‌ பணியாற்றத்‌ தொடங்கினார்‌. இரண்டு ஆண்டுகளின் பின் திருவாவடுதுறை அம்பலவாணதேசிக சுவாமிகளுக்குத்‌ திருமுறை ஆய்வுத் துணைவராகவும்‌,[4] தொடர்ந்து திருவாரூர்க்‌ கல்லூரியில்‌ ஆசிரியராகவும்‌ பணியாற்றினார்.

சேர் பொன்னம்பலம் இராமநாதனின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியிலும், இராமநாதன் கல்லூரியிலும் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்ற 1917 ஆம் ஆண்டில் இலங்கை வந்தார்.[2][4] மாவிட்டபுரத்தில்‌ இவர்‌ வாழ்ந்த வீடு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மேற்கு வீதிக்‌ கரையில்‌ அமைந்திருந்தது. தேசநேசன் இதழில் இவர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[4] இவரது மனைவி பெயர் சவுந்தரநாயகி. சமூகசேவகி காலஞ்சென்ற பத்மாவதி பூர்ணானந்தா இவர்களது மகள் ஆவார்.[6]

எழுதிய நூல்கள்

  • உலகியல் விளக்கம் (செய்யுள் தொகுப்பு), 1922
  • பாரதீயம் (3 பாகங்கள், இலக்கண நூல்), 1949
  • திருவாசகப்பேறு: சிவபுராணமும் கீர்த்தித்திருவகவலும், நாவலர் அச்சுக்கூடம், 1953
  • திருவாசகம் ஆராய்ச்சிப் பேருரை, தெல்லிப்பழை, 1954
  • பறம்புமலைப் பாரி (செய்யுள்கள்)[2]
  • புத்திளஞ் செழுங்கதிர்ச் செல்வம் (செய்யுள்கள்)[4]
  • திருவடிக் கதம்பம் (செய்யுள்கள்)[2]
  • காந்தி வெண்பா (அச்சில் வெளிவரவில்லை)[2]

பட்டங்கள்

  • பண்டிதர்
  • புலவர்மணி - யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் 1952 திசம்பர் 1 இல் பொற்கிழியளித்து இப்பட்டத்தை வழங்கியது.[5]

மேற்கோள்கள்

தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. தமிழ்ப் புலவர் வரிசை ஒன்பதாம் புத்தகம், சு. அ. இராமசாமிப் புலவர், பக். 134, 1955
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 ஈழகேசரி வெள்ளிவிழா மலர். யாழ்ப்பாணம்: ஈழகேசரி. 1956. பக். பக். 209. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1956. 
  3. "உரையாசிரியர்கள்". தமிழ் இணையக் கல்விக்கழகம் இம் மூலத்தில் இருந்து 27 சூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120727034504/http://218.248.16.19/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=524. பார்த்த நாள்: 1 சனவரி 2022. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 நாவலர் மாநாடு விழா மலர் 1969. 1969. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1969. 
  5. 5.0 5.1 கலாநிதி, திசம்பர் 1952, பக். 7
  6. "இறைபதமடைந்த சமூகசேவகி பத்மாவதி பூரணானந்தா". தினக்குரல். 10 சூன் 2011. http://www.thinakkural.com/articles/5620-2011-06-10-03-58-25.html. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/index.php?title=க._சு._நவநீதகிருஷ்ண_பாரதி&oldid=15490" இருந்து மீள்விக்கப்பட்டது