க. சிவராமமூர்த்தி
களம்பூர் சிவராமமூர்த்தி (Calambur Sivaramamurti), (1909–1983) இந்திய அருங்காட்சியகவியல், கல்வெட்டியல், சிற்பக் கலை மற்றும் சமஸ்கிருத மொழி அறிஞர் ஆவார். இவர் சென்னை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராக பணியாற்றியவர்.[1] பின்னர் புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநராக பணிபுரிந்தார்.[2] இவர் தனது முழு வாழ்க்கையும் இந்தியக் கலையின் பல்வேறு அம்சங்களை ஆய்வு மற்றும் விளக்கத்திற்காக அர்ப்பணித்தவர். பல தனிவரைநூல்கள், இந்தியக் கலை பற்றிய வழிகாட்டி நூல்களை எழுதியதோடு, தென்னிந்திய கல்வெட்டுகள் பற்றிய ஒரு அடிப்படை நூலையும் இவர் எழுதியுள்ளார்.
களம்பூர் சிவராமமூர்த்தி | |
---|---|
பணி | அருங்காட்சியகவியல், கல்வெட்டியல், கலை வரலாற்றாளர் |
வாழ்க்கை
சென்னை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராக பணியாற்றிய களம்பூர் சிவராமமூர்த்தி, பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்து, கொல்கத்தா அருங்காட்சியகத்தில் காபாட்சியாராக சேர்ந்தார். பின்னர் புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தின் உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். இறுதியாக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குநராக பதவி வகித்தார்.
களம்பூர் சிவராமமூர்த்தி பன்னாட்டு அருங்காட்சியகவியல் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும், மற்றும் பன்னாட்டு அருங்காட்சியகக் குழுவின், இந்தியக் கிளையின் தலைவராகவும் பணியாற்றினார். அவர் இந்திய தேசிய அருங்காட்சியகத்தில் பணிபுரிந்த காலத்தில் முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார் மற்றும் பல்வேறு நூல்களை எழுதினார்.
கலை, சிந்தனை மற்றும் இலக்கியம் என அனைத்து அம்சங்களிலும் சிவபெருமானின் நடன வடிவமான நடராஜரைப் பற்றி இவர் முழுமையாக ஆய்வு செய்தார். இரண்டு ஆண்டு முயற்சியின் பலனாக 1974-ஆம் ஆண்டில் "கலை, சிந்தனை மற்றும் இலக்கியத்தில் நடராஜர்" (Natraja:In Art, Thought and Literature) என்ற நூலை எழுதினார். இந்நூலில் நாட்டியம், நடராஜரின் நடனத்தின் முக்கியத்துவம், நடன கரணங்கள், சிவனின் தாண்டவத்தில் வழங்கப்பட்டது. நடராசர் படம், சில்ப நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள நடராஜரின் வகைகள், சிற்பம் மற்றும் ஓவியத்தில் நடராஜரின் வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளது. இசை, நடனம், ஓவியம், சிற்பம் அல்லது கல்வெட்டு என எதுவாக இருந்தாலும், நுண்கலைகளின் தலைசிறந்த தெய்வமாக நடராஜரை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. கலை வரலாற்றாசிரியரான களம்பூர் சிவராமமூர்த்தி, தனது முழு வாழ்க்கையையும் சின்னவியல், குறிப்பாக நடராஜக் கருப்பொருளுக்கு அர்ப்பணித்தார்.
களம்பூர் சிவராமமூர்த்தி கல்வெட்டு, நாணயவியல், சிற்பம் மற்றும் ஓவியங்களை இலக்கியத்தின் மூலம் இலக்கிய இணையாகக் கொடுக்கும் அணுகுமுறையிலிருந்து பிரபலப்படுத்துவதற்குப் காரண்மானவர். சமசுகிருதம் மற்றும் கலைகள் மீதான அவரது காதல், அவரது அழகியல் சுவை மற்றும் வரைதல், ஓவியம் மற்றும் சிற்பம் ஆகியவற்றின் திறன் ஆகியவை கலை மற்றும் இலக்கியம் பற்றிய அவரது நோக்கத்தை அடைய உதவியது.
தனி நபர் வாழ்க்கை
சிவராமமூர்த்தி அப்பைய தீட்சிதர் பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் பேரூராட்சி சுந்தர சாஸ்திரியின் மகனாவார். இராமாயணம் உபன்யாசகர் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரியின் பேத்தியும், தஞ்சாவூர் மாவட்ட கல்வி அதிகாரியும், பட்டாபிராமனின் மகளுமான சம்பூர்ணாவை, சளம்பூர் சிவராமமூர்த்தி மணந்தார். இவர்களுக்கு சுந்தரராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி என்ற இரு மகன்கள் இருந்தனர்
மறைவு
களம்பூர் சிவராமமூர்த்தின் 1983-ஆம் ஆண்டில் மாரடைப்பு காரண்மாக தமது 74 அகவையில் உயிர் நீத்தார்.
படைப்புகள்
களம்பூர் சிவராமமூர்த்தி தனது படைப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.[3][4]
- Natraja : In Art, Thought and Literature
- Indian Painting
- Sri Lakshmi in Indian Art and Thought
- Ramo Vigrahavan Dharmah: Rama Embodiment of Righteousness
- Some Aspects of Indian Culture
- The Art of India
- Birds and Animals in Indian Sculpture
- South Indian Paintings
- South Indian Bronzes
- Rishis in Indian Art and Literature
- Directory Of Museums
- Panorama of Jain Art
- Satarudriya: Vibhuti or Shiva's Iconography
- Invitation to Indian Art (Heritage India)
- The Painter in Ancient India
- World Heritage Series- The Great Chola Temples
- Some Aspects of Indian Culture
- SANSKRIT LITERATURE AND ART MIRRORS OF INDIAN CULTURE
- Mahabalipuram
மேற்கோள்கள்
- ↑ A, Srivathsan (13 August 2008). "In Madras Museum, antique sculptures in neglect". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080913213853/http://www.hindu.com/2008/08/13/stories/2008081351130500.htm.
- ↑ Calambur Sivaramamurti
- ↑ Books by C Sivaramamurti
- ↑ Book authored by C Sivaramamurti