கௌரி ஈசுவரன்

கௌரி ஈசுவரன் (Gowri Ishwaran)ஒரு இந்திய கல்வியாளர், கல்வி ஆலோசகர் மற்றும் சிவ் நாடர் அறக்கட்டளையின் ஆலோசகர் ஆவார்.[1] உலகளாவிய கல்வி மற்றும் தலைமை அறக்கட்டளையின் (tGELF) தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அவர் தற்போது அறக்கட்டளையின் துணைத் தலைவராக உள்ளார். புதுதில்லியில் உள்ள இருபாலர் கல்வி நிறுவனமான ஒரு சமஸ்கிருதப் பள்ளியின் நிறுவனர் மற்றும் முதல்வரும் ஆவார்.[2]

கௌரி ஈசுவரன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கௌரி ஈசுவரன்
பிறந்தஇடம் இந்தியா
பணி கல்வியாளர்
குறிப்பிடத்தக்க விருதுகள் பத்மசிறீ

ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டதாரியான இவர் பாட்னா, செயின்ட் மைக்கேல் பள்ளி, தில்லி, ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளி, மற்றும் டெல்லி பப்ளிக் பள்ளி [3] போன்ற பல நிறுவனங்களில் கற்பித்த அவர் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.[4] அவர் சிவ் நாடார் அறக்கட்டளையின் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக உள்ளார்.[5] சிவ் நாடார் பள்ளியின் ஆலோசனைக் குழுவில் ஒரு உறுப்பினரும் ஆவார்.மேலும், வேதிகா அறக்கட்டளை மற்றும் கலை மற்றும் தொடர்புக்கான ஸ்ரீ அரவிந்தோ மையம் ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் ஒரு கல்வி சார் முன்னெடுப்பான பெண்களுக்கான வேதிகா அறிஞர்கள் திட்டத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[6][7] இந்திய கல்வித் துறையில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய குடிமக்களுக்கான நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருதினை இந்திய அரசு அவருக்கு வழங்கியது.[8]

மேற்கோள்கள்

  1. "Gowri Ishwaran". Shiv Nadar Foundation. https://www.shivnadarfoundation.org/who-we-are/leadership/gowri-ishwaran. பார்த்த நாள்: 1 October 2020. 
  2. "Indian Education Congress". Education Biz. 2015 இம் மூலத்தில் இருந்து 27 நவம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151127083718/http://www.educationbiz.in/2013/gowri.php. பார்த்த நாள்: 26 November 2015. 
  3. "IBN Live chat". IBN Live. 2015 இம் மூலத்தில் இருந்து 27 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151127014106/http://features.ibnlive.in.com/chat/gowri-ishwaran/schooling-and-children/30.html. பார்த்த நாள்: 26 November 2015. 
  4. "Session Speakers". India Today. 27 January 2012. http://indiatoday.intoday.in/educationsummit/gowri-ishvaran.jsp. 
  5. "Senior Administrators". Shiv Nadar Foundation. 2015 இம் மூலத்தில் இருந்து 27 நவம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151127050540/http://www.shivnadarfoundation.org/aboutus/senioradministrators. பார்த்த நாள்: 26 November 2015. 
  6. "Advisory Board". Shiv Nadar School. 2015 இம் மூலத்தில் இருந்து 24 நவம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151124035220/http://shivnadarschool.edu.in/website/people/partnering-for-excellence/advisory-board2/. பார்த்த நாள்: 26 November 2015. 
  7. "Vedica Scholars Programme for Women". Vedica Scholars. 2015 இம் மூலத்தில் இருந்து 30 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170730071622/http://www.vedicascholars.com/team/governing-council/gowri-ishwaran-3/. பார்த்த நாள்: 26 November 2015. 
  8. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து 15 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. பார்த்த நாள்: 21 July 2015. 
"https://tamilar.wiki/index.php?title=கௌரி_ஈசுவரன்&oldid=18788" இருந்து மீள்விக்கப்பட்டது