கௌதாரிமுனை

கௌதாரிமுனை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது பூநகரிக்குத் வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கௌதாரிமுனை மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பாகும்.

கௌதாரிமுனை
Kowtharimunai
கிராமம்
கௌதாரிமுனை is located in Northern Province
கௌதாரிமுனை
கௌதாரிமுனை
இலங்கை, வட மாகாணத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°35′N 80°5′E / 9.583°N 80.083°E / 9.583; 80.083
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபூநகரி

சிறப்பு

கௌதாரிமுனை 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரதேசம் ஆகும்.[2] இவ்வூரில் வாழ்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக அயல் நாடுகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.[2] இங்குள்ள வெள்ளை மணல் மேடுகளே கடல் நீர் உள்லே வராமல் பாதுகாக்கின்றன.[3]

இங்குள்ள பாடசாலைகள்

  • கௌதாரிமுனை அரசுத் தமிழ்க் கலவன் பாடசாலை

இங்குள்ள கோவில்கள்

  • கௌதாரிமுனை விநாயகர் ஆலயம்[2]
  • கௌதாரிமுனை பட்டிவைரவர் கோயில்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கௌதாரிமுனை&oldid=38972" இருந்து மீள்விக்கப்பட்டது