கோ. முத்துப்பிள்ளை
கோ. முத்துப்பிள்ளை (15 செப்டம்பர் 1919 - 2009) என்பவர் ஒரு தமிழறிஞர், தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் அரசுப் பணியில் இருந்து கொண்டே தமிழ்ப்பணி ஆற்றியவர். ஆட்சித் தமிழுக்காக புதிதாக பல சொற்கள் உருவாக்க உழைத்தார்.[1]
பிறப்பும் வாழ்வும்
இவர் தஞ்சாவூரை அடுத்த மானாங்கோரை என்ற சிற்றூரில் 1901 செப்டம்பர் 15 ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர் கோபால்சாமி பிள்ளை, கமலாம்பாள் ஆகியோராவர். தஞ்சையில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றாவர். அரசு பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு எழுதி முதல் மாணவராக தேற்ச்சிபெற்றார். பின்னர் 1942 இல் சென்னை தலைமைச்செயலகத்தில் இளநிலை உதவியாளாராகப் பணியில் சேர்ந்தார்.[2]
ஆற்றிய பணிகள்
ஆட்சித் தமிழில் ஆர்வம் கொண்ட இவர் கோப்புகளில் ஆங்கிலத்தில் எழுதும் வழக்கத்தை மாற்றி தமிழில் எழுதுவதும் பழக்கத்தை மேற்கொண்டார். சக பணியாளர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவித்தார். அக்காலகட்டத்தில் சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றவேண்டும் என்று தலைவர்கள் போராடிவந்தனர். ஆனால் அக்கோரிக்கை ஏற்ப்பகடாமல் இருந்துவந்த நிலையில், தான் தலைவராக இருந்த சென்னை மாகாணத் தலைமைச் செயலகப் பணியாளர்கள் மன்றம் என்பதை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகப் பணியாளர்கள் மன்றம் என்று மாற்றினார். இந்தச் செயலுக்காக தலைவர்கள் பலரின் பாராட்டுதலைப் பெற்றார்.
தமிழ்நாடு அரசு முதன்முதலில் தமிழ் வளர்ச்சித் துறையை உருவாக்கியபோது அத்துறையுன் முதல் உதவிச் செயலாளராக பொறுப்பேற்றார். 1973 இல் தலைமைச்செயலகத்தில் ‘முத்தமிழ் மன்றம்’ உருவானபோது அதன் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றினார். தமிழ்நாட்டில் நடைப்பெற்ற மூன்று உலகத்தமிழ் மாநாடுகளிலும் இவர் பேராளராகப் கலந்துகொண்டார். இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் இவர் எழுதிய அரியணையில் அழகு தமிழ் என்ற கட்டுரை இடம்பெற்றது. நீதியரசர் எஸ். மகராசன் தலைமையில் இயங்கிய ஆட்சிமொழி ஆணையத்தில் ஒன்பதாண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றினார். தஞ்சை தமிழ்ப்பல்கலையின் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தவர்.
இவர் தனது 90 வயதில் காலமானார்.
விருதுகள்
- ம. கோ. இராமச்சந்திரன் கைகளால் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதைப்பெற்றார்.
- முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருதை முதன்முதலில் (2000) பெற்றார்.
எழுதிய நூல்கள்
படைப்புகள் நாட்டுடமையாக்கல்
6, ஏப்ரல், 2023 அன்று தமிழக அரசால் இவரின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, இவரின் மரபுரிமையாளர்களுக்கு பத்து இலட்சம் தொகை அறிவிக்கபட்டது.[5]
மேற்கோள்கள்
- ↑ "Tamil Virtual University". https://www.tamilvu.org/courses/degree/p201/p2014/html/p2014104.htm.
- ↑ "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - கோ. முத்துப்பிள்ளை". http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10505.
- ↑ முத்துப்பிள்ளை, கோ (1998). "மொழிபெயர்ப்பு வேடிக்கைகள்" (in ta). வசந்தா பதிப்பகம். https://books.google.com/books?id=YxpUPAAACAAJ&newbks=0&hl=ta.
- ↑ முத்துப்பிள்ளை, கோ (2001). "தமிழறிவோம்" (in ta). பூவழகி பதிப்பகம். https://books.google.co.in/books/about/%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%258B%25E0%25AE%25AE%25E0%25AF%258D.html?id=QPFMPAAACAAJ&redir_esc=y.
- ↑ A, Jayashree (2023-04-07). "பரிவுத்தொகை அறிவிக்கப்பட்ட 5 தமிழ் எழுத்தாளார்கள் யார்.. யார்? - அவர்களின் படைப்புகள் என்னென்ன? - முழுவிபரம்" (in ta). https://www.puthiyathalaimurai.com/features/books-of-five-tamil-writers-were-nationalized-and-given-grants-by-tn-government.