கோ. திரவியராசா

கோணமலை திரவியராசா
கோ.திரவியராசா3.jpg
பிறப்பு பெப்ரவரி 19, 1952
கொட்டியாரம்,
திருகோணமலை
மாவட்டம்,
இலங்கை
இறப்பு 4 திசம்பர் 2018
(அகவை 66) சம்பூர்,
திருகோணமலை,
இலங்கை
தேசியம் இலங்கைத் தமிழர்,
அறியப்படுவது பத்திரிகையாளர்
ஈழத்து எழுத்தாளர்
கல்வி பட்டதாரி

கோணாமலை திரவியராசா

என்ற இயற்பெயர் கொண்ட கோ. திரவியராசா (பெப்ரவரி 19, 1952 – டிசம்பர் 04, 2018) ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். கவிதை, சிறுகதை, ஆய்வு நுால், விமர்சனக்கட்டுரை, ஊடகவியலாளர், அரசியல் பிரமுகர், கல்வியலாளர் ஆகிய துறைகளில் தமது ஆளுமையைச் செலுத்தியவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

திரவியராசா திருகோணமலை, சம்பூரில் கோணாமலை-தங்கம்மா ஆகியோருக்கு 1952 மார்ச் 19 அன்று மூன்றாவது மகவாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை சம்பூர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தொடங்கினார். வறுமை குடிகொண்ட காலத்தில் அடுத்த நிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மகா வித்தியாயலத்தில் பெற்றார். உயர்கல்வி கற்ற பின்னர் 1970 இல் மூதூரின் அ. தங்கத்துரையுடன் சேர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியலில் இறங்கினார். தங்கத்துரையின் எழுதுனராகவும் செயலாளராகவும் செயற்பட்டார்.[1] 1972 இல் இலங்கைத் தொழிலாளர் கழகத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் மலையக மக்களுக்காக மலையகம் சென்று பணி செய்தார்.

1974 இல் தினபதி பத்திரிகையின் மூதூர் பிராந்திய செய்தியாளராகப் பணியாற்றினார். தொடர்ந்து சிந்தாமணி, வீரகேசரி, தந்தி, மித்திரன், உதயன், சஞ்சீவி பத்திரிகைகளின் செய்தியாளராக சேவை புரிந்தார். 1977 இல் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் எழுத்தராகப் பணி புரிந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று, ஆசிரியப் பணியில் தன்னை இணைந்து கொண்டார். பின்னர் ஆசிரிய ஆலோசகர், பாடசாலை அதிபர், உதவிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரி எனப் பதவி உயர்வுகள் பெற்றார். மூதூர் இணக்க சபையின் செயலணி உறுப்பினராகவும், பிரதேச கலாசார பேரவையின் இணைச் செயலாளராகவும் செயற்பட்டார்.

ஈழப்போர்க் காலத்தில் 2006 இல் ஏற்பட்ட சம்பூர் இடம்பெயர்வின் பின்னர் மனமுடைந்து போனாலும் ஊரின் மீள்குடியேற்றறத்திற்காய் செயற்பட்டார். பத்திரிகைகளில் ஊர் மீள்குடியேற்றம் தொடர்பாகக் கட்டுரைகளை புனைபெயர்களில் எழுதி வெளிகொணர்ந்தார். சம்பூரின் தொன்மை, பூர்வீகம், அமைவிடம், பெயர் விளக்கம் என்பவற்றை ஒன்றுதிரட்டி குளக்கோட்டன் வரலாற்று ஆதரங்களை உள்வாங்கி மூதூர் என்ற நூலையும், சம்பூர் என்ற வரலாற்று ஆய்வு நூலையும் 2010 இல் வெளியிட்டார். அத்தோடு அந்நூலிலே சம்பூர் மக்களுக்கு 1900-களில் வழங்கப்பட்ட ஆங்கிலேயர் காலத்து காணி உரிமங்களை (உறுதிகளை) வெளிக்கொணர்ந்தார். வாழ்நாள் கால சமாதான நீதவானாக சேவையாற்றினார்.

 
புத்தக வெளியீடு
 
ஊடகவியலாளர்

2010 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு கட்சியின் சின்னத்தில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார்.[2]

குடும்ப உறவுகள்

  • தந்தை தாய் - கோணாமலை-தங்கம்மா.[1]
  • சகேதரர்கள் - அகிலாண்டநாயகி-அக்கா, நாகபாக்கியம்-அக்கா, மணிராசா-தம்பி, குமாரநாயகம்(தபாலகர்)- தம்பி. [1]
  • மருமக்கள் - நாகபாக்கியம்- சச்சிதானந்தம்(அதிபர்), ஸ்ரீதர ஆனந்தம்(அதிபர்), நிர்மலானந்தன்,நிர்மலா, புவநந்தி,உதயபானு.[1]


கல்வியும் பணியும்

  • தி/சம்பூர் அ.த.க.பாடசாலை - 10.01.1957 - 10.10.1962 வரை.[1]
  • மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியில் கல்வி 16.10.1962-11.06.1969 வரை.[1]
  • மலையகத்தில், இலங்கை தொழிலாளர் கழகத்தில் பணி - 04.11.1971 - 1972 வரை.[1]
  • கட்டிடத் திணைக்களத்தில் - 18.06.1973 - 1976 வரை.[1]
  • பிரேதச சபை செயலகத்தில் - 1976 - 1977 வரை.[1]
  • ஆசிரியப் பணியில் - 15.06.1977 - 2008 வரை.[1]
  • பேராதனைப் பல்கலைக்கழகம் -கலைமானி பட்டம் - 1989.[1]

கல்விப் பணி

  • 15.06.1977 இல் ஆசிரியர் நியமனம்.[1]
  • 1988-1991 வரை ஆசிரியர் ஆலோசகர்-மூதுார் கல்வி வலயம்.
  • 1989.06.01 இல் அதிபர் தரம்.
  • 15.09.1994 இல் கோட்டக்கல்வி அதிகாரி
  • 1986.09.02 இல் தி/சம்பூர் மகா வித்தியாலயம்
  • 1991.06.01 இல் தி/கூனித்தீவு நாவலர் வித்தி- அதிபர்
  • 1991.11.01 இல் தி/இளக்கநதை அ.த.க.வித்தி- அதிபர்
  • 1992.04.01 இல் தி/புனித அந்தோனியார் மகா வித்தி- பிரதி அதிபர்.

அரசியல் பணி

எழுத்து

  • 1974 இல் தினபதி பத்திரிகையின் மூதூர் பிராந்திய செய்தியாளராகப் பணி .[1]
  • தொடர்ந்து சிந்தாமணி, வீரகேசரி, தந்தி, மித்திரன், உதயன், சஞ்சீவி பத்திரிகைகளின் செய்தியாளராக சேவை புரிந்தார்.[1]
  • ஈழப்போர்க் காலத்தில் 2006 இல் ஏற்பட்ட சம்பூர் இடம்பெயர்வின் பின்னர் ஊரின் மீள்குடியேற்றறத்திற்காய் செயற்பட்டார். பத்திரிகைகளில் ஊர் மீள்குடியேற்றம் தொடர்பாகக் கட்டுரைகளை புனைபெயர்களில் எழுதி வெளிகொணர்ந்தார்.[1]
  • சம்பூரின் தொன்மை, பூர்வீகம், அமைவிடம், பெயர் விளக்கம் என்பவற்றை ஒன்றுதிரட்டி குளக்கோட்டன் வரலாற்று ஆதரங்களை உள்வாங்கி ''மூதூர்'' என்ற நூலையும், ''சம்பூர்'' என்ற வரலாற்று ஆய்வு நூலையும் 2010 இல் வெளியிட்டார்.[[1]][1]
  • தினகரனில் - திருமலை பிரதேச தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உள்ளங்களில் இன்றும் வாழும் அமரர் தங்கத்துரை என்ற கட்டுரை. [[2]]
  • தினகரனில் - வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில் என்ற கட்டுரை. [[3]]
  • பல கட்டுரைகள் மற்றும் இலக்கிய ஆக்கங்கள் 1985, 07.07.1990 களில் இடம்பெற்ற சம்பூர் எரிப்பு சம்பவத்திலும், 2006 இடப்பெயர்விலும் தொலைந்தும் எரிந்தும் விட்டதாக கவலைகொண்டு தெரிவித்தார்.


விருதுகள்

  • இவர் சமூகத்திற்கும், கலைக்கும் ஆற்றிய தொண்டிற்காக 2014ல் கலாபூசணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[1]
  • சம்பூர் நுாலுக்கு மாகாண இலக்கிய விருது.[1]


மறைவு

  • கோ. திரவியராசா 2018 திசம்பர் 12 இல் திருகோணமலை வைத்தியசாலையில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கோ._திரவியராசா&oldid=2212" இருந்து மீள்விக்கப்பட்டது