கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்

கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில் அப்பர் மற்றும் சம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 102ஆவது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
கோயில் வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):வெண்ணி கரும்பேஸ்வரர் கோயில்
பெயர்:கோயில் வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கோயில் வெண்ணி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வெண்ணி நாதர்
தாயார்:அழகிய நாயகி
தல விருட்சம்:நந்தியாவர்த்தம்
தீர்த்தம்:சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:உண்டு
வரலாறு
தொன்மை:2000 ஆண்டுகள்
கட்டப்பட்ட நாள்:2டம் நூற்றாண்டு
அமைத்தவர்:கரிகால் சோழன்

அமைவிடம்

இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோயில்வெண்ணி எனும் ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூர்-நீடாமங்கலம் சாலையில் சாலியமங்கலத்தைக் கடந்து கோயில்வெண்ணி நிறுத்தத்திலிருந்து இடப்புறமாக 1/2 கிமீ சென்றால் இக்கோயிலை அடையலாம்.[1]

இறைவன், இறைவி

இச்சிவாலயத்தின் இறைவன் வெண்ணிகரும்பேஸ்வரர். இறைவி அழகிய நாயகி.

சிறப்புகள்

இத்தலம் முசுகுந்த சக்கரவர்த்தி திருப்பணி செய்த தலமாகும். சங்ககாலப் புலவர் வெண்ணிக் குயத்தியார் இங்கு வாழ்ந்துள்ளார்.[2]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 254

வெளி இணைப்புகள்

அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

இவற்றையும் பார்க்க