கோபி சுந்தர்

கோபிசுந்தர் சி. எஸ் (Gopisundar C. S) தொழில் ரீதியாக கோபி சுந்தர் என்று அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய இசை இயக்குனரும், நிகழ்ச்சியாளரும், பாடகரும், பாடலாசிரியரும், நடிகரும் மற்றும் கலைஞருமாவார்.[1] மேலும் இவர் ஏற்கனவே இயற்றப்பட்ட படைப்புகளிலிருந்து இசையைப் பிரித்தெடுப்பதில் திறமையானவர் ஆவார். தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு இசையமைத்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஏனெனில் அவர் கிட்டத்தட்ட 5,000 ஜிங்கிள்ஸைக் கொண்டுள்ளார்.[2] ஒரு விசைப்பலகை நிகழ்ச்சியாளராக, இசையமைப்பாளர் இரட்டையர் விஷால்-சேகர் உட்பட பல இசை இயக்குனர்களுடன் இவர் பணி புரிந்துள்ளார். அதன் இசைக்காக இவர் பிண்ணனிக் குரல்களையும் வழங்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான இவர், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிப் படங்களில் வணிக ரீதியாக பல வெற்றிகரமான பாடல்களைத் தந்துள்ளார்.

ஆர்வமுள்ள இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் குறைந்த பொருள் செலவிலான தயாரிப்புகளை சாத்தியமாக்குவதற்கும் ஒரு யோசனையுடன் கோபி சுந்தர் தனது சொந்த பதிவு நிறுவனமான கோபி சுந்தர் இசை நிறுவனத்தை 2014 இல் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டில், துபாயில் "பேண்ட் பிக் ஜி" என்ற நேரடி இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். இவர் தனது ஒலிப்பதிவு தொகுப்புகள் மற்றும் திரைப்பட இசையமைப்புகளுக்காக பல விருதுகளை வென்றுள்ளார். இதில் தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருது மற்றும் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் ஆகியவை அடங்கும். 2017 ஆம் ஆண்டில், இவரது இரண்டு பாடல்களும், புலிமுருகன் படத்தின் பின்னணி இசையும் 90 வது அகாதமி விருதுகள் பரிந்துரைகளில் சிறந்த அசல் பாடல் மற்றும் சிறந்த அசல் இசை பிரிவுகளில் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன, ஆனால் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.

ஆரம்ப கால வாழ்க்கை

சுரேஷ் பாபு மற்றும் லிவிக்கு என்பவர்களுக்குப் பிறந்த சுந்தர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை கொச்சியில் கழித்தார். இவரது தந்தையின் ஒலிப்பதிவுக் கூடத்தில் பணிபுரிவதிலிருந்தும், தனது தாயுடன் வானொலியைக் கேட்பதிலிருந்தும் இவரது ஆரம்பகால ஆர்வம் தொடங்கியது. பள்ளி நாட்களில், சுந்தர் படிப்பை விட கைம்முரசு இணை மற்றும் கிளபம் வாசிப்பதில் ஆர்வமாக இருந்தார். இறுதியில், அவர் தனது பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த பின்னர் பள்ளியை விட்டு வெளியேறியபோது,[3] இவரது கனவுகளைத் தொடர இவரது பெற்றோர் போதுமான ஆதரவாக இருந்தனர். இசையில் ஒரு தொழிலாக மேற்கொள்வதில் ஆர்வமுள்ள இவர் சென்னைக்குச் சென்றார், அங்கு இவர் அரசு இசைக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அதில் ஏமாற்றத்தை உணர்ந்தார். [4]

தொழிலின் ஆரம்ப ஆண்டுகளில்

உடன் பணிபுரிபவர்கள்

அமல் நீரத் இயக்கிய படங்களுக்கு சுந்தர் அதிகம் இசையமைத்துள்ளார். ரோஷன் ஆண்ட்ரூஸ், அருண்குமார் அரவிந்த், வைசாக், திரைக்கதை எழுத்தாளர் பாபி-சஞ்சய் மற்றும் முரளி கோபி ஆகியோருடன் இவர் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தார்.[5] இவர் இசையமைத்த பாடல்களுக்கான பெரும்பாலான பாடல்களை ரபீக் அகமது எழுதியுள்ளார். இருப்பினும், பாடலாசிரியர்களான சந்தோஷ் வர்மா மற்றும் பி.கே.ஹரி நாராயணன் ஆகியோருடன் இவர் விரிவாக பணிபுரிந்துள்ளார்.

குடும்பம்

கோபி சுந்தர் பிரியா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு மாதவ் மற்றும் யாதவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரியாவும் சுந்தரும் தற்போது பிரிந்துவிட்டனர் அவர்களது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. பாடகர் அபயா ஹிரன்மயிஉடன் சுந்தர் ஒரு உறவில் நுழைந்தார். ஜூலை 2018 இல், இவர்கள் 9 ஆண்டுகளாக ஒன்றாக இருந்ததை வெளிப்படுத்தினார்.

குறிப்புகள்

  1. "The Indian Performing Right Society – Members". iprs.org. Archived from the original on 2017-10-05. பார்க்கப்பட்ட நாள் 2019-12-28.
  2. Sathyendran, Nita. "Sound Sense". http://www.thehindu.com/features/metroplus/Sound-Sense/article15788111.ece. 
  3. "Failing SSLC is just a beginning: Gopi sunder – Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/music/Failing-SSLC-is-just-a-beginning-Gopi-sunder/articleshow/47038073.cms. 
  4. "Sound Sense". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/Sound-Sense/article15788111.ece. 
  5. "List of Malayalam Movies Categorized for Musician Gopi Sundar". en.msidb.org. பார்க்கப்பட்ட நாள் 25 June 2017.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கோபி_சுந்தர்&oldid=20736" இருந்து மீள்விக்கப்பட்டது