கோதண்ட இராமையா
கோதண்ட இராமையா (கே.ஆர் மற்றும் கேயார் என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவர் ஓர் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் பல்வேறு திரையுலக அமைப்புகளில் பல முன்னணி பதவிகளில் இருந்துள்ளார்.[2][3]
கேயார் | |
---|---|
பிறப்பு | கோதண்ட இராமையா 1 சனவரி 1953[1] இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
மற்ற பெயர்கள் | கே.ஆர் |
பணி | Film director, producer, distributor, exhibitor, media personality |
செயற்பாட்டுக் காலம் | 1975–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | இந்திரா |
தொழில்
கே.ஆர் 1972 இல் சென்னையில் உள்ள அடையார் திரைப்படக் கல்லூரியில் திரைப்பட செயலாக்கம் பிரிவில் படித்தார். 1975 இல் பட்டம் பெற்றதும், தூர்தர்ஷன் கேந்திரத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றினார். கே.ஆர் தனது முதல் திரைப்படமாக மலையாள திரைப்படமான சிசிரதில் ஓரு வசந்தம் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். வெளியீட்டிற்கு முன்னர், இந்த படம் பல விநியோக சிக்கல்களை எதிர்கொண்டது, இறுதியில் 1980 இல் சுகுணா ஸ்கிரீனால் வெளியிடப்பட்டது. படம் வணிக ரீதியாக தோல்வியுற்ற போதிலும், சென்னை நகரம், வடாற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி தமிழ்நாடு முழுவதும் திரைப்பட விநியோகம், வெளியீட்டுக்குச் செல்ல இது இவருக்கு ஊக்கத்தை அளித்தது. இந்த அனுபவத்தைக் கொண்டு இவர் தில்லு முல்லு, தாய் வீடு, வைதேகி காத்திருந்தாள், சிந்து பைரவி, புன்னகை மன்னன், சின்னபூவே மெல்லபேசு, மைக்கேல் மதன காமராஜன், பூவிழி வாசலிலே, குரு சிஷ்யன், மாப்பிள்ளை, ராஜாதி ராஜா, மைடியர் குட்டிச்சாத்தான் 3 டி போன்ற வெற்றிப் படங்களை விநியோகித்தார்:.[4]
1991 முதல், கே.ஆர் தொடர்ச்சியாக நடுத்தர செலவில் தயாரிக்கபட் படங்களை இயக்கி தயாரித்துள்ளார். தமிழில் ஈரமான ரோஜாவே திரைப்படத்தை புதுமுகங்களைக் கொண்டு இவர் இயக்க அது மிகப்பெரிய அளவில் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. நடிகர்கள் விஜயகாந்த், ராம்கி, குஷ்பூ, ஊர்வசி ஆகியோரைக் கொண்டு பல சந்தர்ப்பங்களில் இவர் குறிப்பிடத்தக்க படங்களை உருவாக்கினார். இவர் மொத்தத்தம் பதினான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2005 ஆம் ஆண்டில் வெளியான இவரது டான்சர் திரைப்படத்தின் கதாநாயகன் மிகவும் குறிப்பிடத்தக்கவராவார். அப்படத்தில் நடித்த குட்டி ஒரு திறமையான நடனக் கலைஞர், திறமையான கலைஞரான அவர் தேசிய விருது, மூன்று மாநில விருதுகள், கனேடிய மதிப்புமிக்க திரைப்பட விழாவில் ஒரு விருதையும் வென்றார்.[சான்று தேவை] இந்த படம் லண்டன் ஊனமுற்றோர் கலை மன்றத்தில் ஒரு சிறப்புத் திரையிடலில் திரையிடப்பட்டது.[சான்று தேவை]
திரைப்படத் தயாரிப்பில் இவரது ஈடுபாட்டால் பல்வேறு இந்திய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோது, இருபத்தி எட்டு திரையரங்குகளை தமிழ்நாட்டு நகரங்கள், பாண்டிச்சேரி, திருப்பதி போன்ற பகுதிகளில் குத்தகைக்கு எடுத்திருந்தார். 1984 முதல் 1993 வரை சென்னையில் சத்யம் சினிமாஸ் திரையரங்கையும் நடத்தினார்.
இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தை தமிழ், தெலுங்கிலும், கமலகாசன் நடித்த உரையாடல் இல்லாத படமான சேசும்படம் , தமிழில் முதல் 70 மிமீ திரைப்படமான ரஜினிகாந்த் நடித்த மாவீரன், விலங்குகளை முக்கிய பாத்தரமாக, அவை பேசக்கூடியதான குறிப்பிடத்தக்க படமனா எங்களையும் வாழ விடுங்கள் ; முதல் முறையாக அனாக்ளிஃப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்பை கிட்ஸ் 3டி; [5] நான்கு மொழிகளில் 3 டி யில் வெளியான முதல் படமான ஜெய் வேதாளம். போன்றவை தமிழ் திரைப்படத் துறையில் இவர் பதித்த சில சுவடுகள் ஆகும்:
2013 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர், படத்தின் பெயர்களை பதிவு செய்தல், நொடித்துபோன திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி அளித்தல், தாமதத்துக்கு உள்ளான படங்களை வெளியிட உதவுவது உள்ளிட்ட பிரச்சினைகளில் பணியாற்றியுள்ளார்.[6] பிற முயற்சிகளாக, படத்தின் விளம்பரச் செலவை ஒழுங்குபடுத்துதல், குறைத்தல் மற்றும் நடிகர்கள் தங்கள் படங்களின் அனைத்து விளம்பர செயல்பாடுகளிலும் கலந்துகொள்ள வேண்டும் போன்றவை ஆகும்.
கே.ஆர் 2003 இல் தமிழில் இதுதான் சினிமா என்ற புத்தகத்தையும் எழுதினார். அதில் திரைப்படத் துறையின் நுணுக்கங்களை விவரித்தும், அதன் எதிர்காலத்தை இன்றய காலகட்டத்தின் பார்வையில் பார்த்து எழுதினார். 1980 களின் முற்பகுதியில் இருந்து இவர் திரைப்படத் துறை மீது அதிகாரம் செலுத்துபவராகவும், தொழில்துறை நுண்ணறிவுகளையும், அடுத்த காலகட்டத்தில் முன்னோக்கி செல்லும் வழியையும் தருகிறார்.[சான்று தேவை]
கே.ஆர் ராடான் மீடியாவொர்க்சில் துணைத் தலைவராக பணியாற்றினார்.
உறுப்பினர் மற்றும் கௌரவ பதவிகள்
பதவி | அமைப்பு | குறிப்புகள் |
---|---|---|
தலைவர் | தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் | 2013 முதல் 2014 வரை |
தலைவர் | தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை | 2000 முதல் 2001 வரை |
நடுவர் குழு உறுப்பினர் | தேசிய திரைப்பட விருதுகள் | 2001 |
துணைத் தலைவர் | தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை | 1985 முதல் 2000 வரை பல சந்தர்ப்பங்கள் |
உறுப்பினர் | தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை | 1985 முதல், சர்ச்சைக் குழு, தலைப்பு பதிவு, விளம்பரம் அனுமதி, சொத்து மேம்பாட்டுக் குழு, திரைப்பட நூற்றாண்டு அமைப்பின் மேலாண்மைக் குழு |
தலைவர் | தேசிய விருது தேர்வுக் குழு | "ஆரோக்கியமான பொழுதுபோக்கு" க்கு |
தலைவர் | தேசிய விருது தேர்வுக் குழு | "சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருது" என்ற பிரிவில் "ஆஸ்கார் விருது" க்கு |
பொதுச்செயலர் | தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் | |
நிறுவனர் தலைவர் | தமிழ் திரைப்பட வர்தக சபை | 1987 முதல் 1991 வரை |
நிறுவனர், நிரந்தர அறங்காவலர் | தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நல அறக்கட்டளை | 1994 இல் நிறுவப்பட்டது |
முன்னாள் தலைவர் | சென்னை நகரம், செங்கற்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் நலச் சங்கம் | 1985 முதல் 1988 வரை |
இந்திய ஒன்றிய தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு. முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நாடு முழுவதிலுமிருந்து பல பிரமுகர்களை உள்ளடக்கிய எட்டு பேர் கொண்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக 2001 இல் கேயார் (இந்திய திரைத்துறை திரையுலகம் தொடர்பாக) இருந்தார்.
தமிழகத் திரைப்படத்துறையின் நிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவிலும் இவர் உறுப்பினராக பணியாற்றினார்.
திரைப்படவியல்
இயக்குநராக
ஆண்டு | படம் | குறிப்புகள் |
---|---|---|
1980 | ஷிஷிரதில் ஓரு வசந்தம் | மலையாள படம்; தயாரிப்பாளரும் |
1991 | ஈரமான ரோஜாவே | தயாரிப்பாளரும் |
1994 | வனஜா கிரிஜா | |
1995 | மாயா பஜார் | |
1996 | இரட்டை ரோஜா | தெலுங்கு படமான சுபா லக்னத்தின் மறுஆக்கம் |
எனக்கொரு மகன் பிறப்பான் | மலையாள படமான ஆதாதே கன்மனியின் மறுஆக்கம் | |
அலெக்சாண்டர் | ||
1997 | தாலி புதுசு | தெலுங்கு பட தாலியின் மறுஆக்கம் |
1998 | கவலை படாதே சகோதரா | மலையாள திரைப்படத்தின் கல்யாஞ்சி ஆனந்த்ஜியின் மறுஆக்கம் |
தர்மா | இந்தி திரைப்படமான ஜிடியின் மறுஆக்கம் | |
கும்பகோணம் கோபாலு | கன்னட படமான கௌரி கணேஷாவின் மறுஆக்கம் | |
1999 | சுயம்வரம் | |
2000 | காதல் ரோஜாவே | இந்தி திரைப்படமான தில் ஹை கே மந்தா நஹின் மறுஆக்கம் |
2005 | டான்சர் | தயாரிப்பாளரும்; சிறந்த எதிர்மறை நாயகன் மற்றும் சிறந்த தயாரிப்பாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருது |
விநியோகத்தராக
ஆண்டு | படம் | பணி | குறிப்பு | |
---|---|---|---|---|
தயாரிப்பாளர் | விநியோகத்தர் | |||
1981 | தில்லு முல்லு | ஆம் | நடிகர்கள் இரசினிகாந்து | |
1981 | ராம் லட்சுமண் | ஆம் | நடிகர்கள் கமல்ஹாசன் | |
1981 | எங்க ஊரு கண்ணகி | ஆம் | நடிகர்கள் சரிதா | |
1982 | நெஞ்சில் ஒரு இராகம் | ஆம் | நடிகர்கள் சரிதா தியாகராஜன் | |
1982 | ரங்கா | ஆம் | நடிகர்கள் இரசினிகாந்து | |
1982 | ராணித்தேனீ | ஆம் | கமல்ஹாசன் விருந்தினர் தோற்றத்தில் | |
1982 | பயணங்கள் முடிவதில்லை | ஆம் | நடிகர்கள் மோகன் | |
1982 | தேவியின் திருவிளையாடல் | ஆம் | நடிகர்கள் தியாகராஜன், கே. ஆர். விஜயா | |
1982 | பொய் சாட்சி | ஆம் | நடிகர்கள் பாக்யராஜ் | |
1982 | நான் குடித்துக் கொண்டே இருப்பேன் | ஆம் | நடிகர்கள் கே. ஆர். விஜயா, தேங்காய் சீனிவாசன் | |
1983 | தலையணை மந்திரம் | ஆம் | சுலக்சனா, பாண்டியன் | |
1983 | சஷ்டி விரதம் | ஆம் | நடிகர்கள் சிவகுமார் | |
1983 | தாய் வீடு | ஆம் | நடிகர்கள் இரசினிகாந்து | |
1984 | வைதேகி காத்திருந்தாள் | ஆம் | நடிகர்கள் விசயகாந்து, ரேவதி | |
1984 | வாழ்க்கை | ஆம் | நடிகர்கள் சிவாஜி கணேசன், அம்பிகா | |
1984 | மைடியர் குட்டிச்சாத்தான் 3டி | ஆம் | இந்தியாவின் முதல் 3டி படம் | |
1984 | நல்ல நாள் | ஆம் | நடிகர்கள் விசயகாந்து, தியாகராஜன் | |
1984 | தம்பிக்கு எந்த ஊரு | ஆம் | நடிகர்கள் இரசினிகாந்து, மாதவி | |
1984 | அன்புள்ள ரஜினிகாந்த் | ஆம் | நடிகர்கள் இரசினிகாந்து | |
1984 | குவா குவா வாத்துகள் | ஆம் | நடிகர்கள் சிவகுமார் | |
1985 | பாடும் வானம்பாடி | | style="background: #90ff90; color: black; vertical-align: middle; text-align: center; " class="table-yes"|ஆம் | நடிகர்கள் ஆனந்த் பாபு | |
1985 | மர்ட் (இந்தி படம்) | ஆம் | நடிகர்கள் தென்னிந்திய விநியோக உரிமை, தமிழ் மறுஆக்க உரிமை | |
1985 | பாடும் பறவைகள் | ஆம் | அவசேனா படத்தின் தமிழ் மோழியாக்கம் | |
1985 | ஜப்பானில் கல்யாண ராமன் | ஆம் | நடிகர்கள் கமல்ஹாசன் | |
1985 | அடுத்தாத்து ஆல்பார்ட் | ஆம் | நடிகர்கள் பிரபு | |
1985 | பூவே பூச்சூடவா | ஆம் | நடிகர்கள் எஸ். வி. சேகர், பத்மினி, நதியா | |
1985 | அவன் | ஆம் | நடிகர்கள் அர்ஜுன் | |
1985 | அந்தஸ்து | ஆம் | நடிகர்கள் முரளி | |
1985 | படிக்காத பண்ணையார் | ஆம் | நடிகர்கள் சிவாஜி கணேசன் | |
1985 | நானே ராஜா நானே மந்திரி | ஆம் | நடிகர்கள் விசயகாந்து | |
1985 | சிந்து பைரவி | ஆம் | நடிகர்கள் சிவகுமார், சுஹாசினி | |
1985 | ஜெய் வேதாளம் 3டி | ஆம் | ஆம் | ஜெய் வேதாளம் படத்தின் தமிழ் மொழியாக்கம் |
1985 | குங்குமச்சிமிழ் | ஆம் | நடிகர்கள் மோகன் | |
1985 | பூ ஒன்று புயலானது | ஆம் | பிரதிகட்டனா படத்தின் தமிழ் மொழியாக்கம் | |
1986 | விக்ரம் | ஆம் | நடிகர்கள் கமல்ஹாசன் | |
1986 | புன்னகை மன்னன் | ஆம் | நடிகர்கள் கமல்ஹாசன் | |
1986 | மைதிலி என்னை காதலி | ஆம் | நடிகர்கள் டி. ராஜேந்தர் | |
1986 | மாவீரன் | ஆம் | தமிழின் முதல் 70எம்.எம் திரைப்படம் | |
1987 | சின்னபூவே மெல்லபேசு | ஆம் | நடிகர்கள் பிரபு, ராம்கி | |
1987 | வேலைக்காரன் | ஆம் | நடிகர்கள் இரசினிகாந்து | |
1987 | மனதில் உறுதி வேண்டும் | ஆம் | நடிகர்கள் சுஹாசினி | |
1987 | திருமதி ஒரு வெகுமதி | ஆம் | நடிகர்கள் விசு | |
1987 | எங்க ஊரு பாட்டுக்காரன் | ஆம் | நடிகர்கள் ராமராஜன் | |
1987 | பேசும் படம் | ஆம் | நடிகர்கள் கமல்ஹாசன் | |
1988 | என் ஜீவன் பாடுது | ஆம் | நடிகர்கள் கார்த்திக் & சரண்யா | |
1988 | இல்லம் | ஆம் | நடிகர்கள் சிவகுமார், அமலா | |
1988 | மணமகளே வா | ஆம் | நடிகர்கள் பிரபு, ரதா | |
1988 | பறவைகள் பலவிதம் | ஆம் | ஆம் | நடிகர்கள் ராம்கி, நிரோஷா |
1989 | சோலை குயில் | ஆம் | நடிகர்கள் கார்த்திக், ராகிணி | |
1989 | மாப்பிள்ளை | ஆம் | நடிகர்கள் இரசினிகாந்து | |
1992 | ராசுக்குட்டி | ஆம் | நடிகர்கள் பாக்யராஜ் | |
1990 | மைக்கேல் மதன காமராஜன் | ஆம் | கமல்ஹாசன் | |
1990 | பெண்கள் வீட்டின் கண்கள் | ஆம் | நடிகர்கள் விசு | |
1991 | குணா | ஆம் | நடிகர்கள் கமல்ஹாசன் | |
1991 | தந்துவிட்டேன் என்னை | ஆம் | விக்ரம் | |
1992 | ஆவாரம் பூ | ஆம் | ஆம் | நடிகர்கள் வினீத் |
1992 | சின்னமருமகள் | ஆம் | ஆம் | நடிகர்கள் சிவாஜி கணேசன் |
1994 | வீரா | ஆம் | நடிகர்கள் இரசினிகாந்து | |
2007 | பரட்டை என்கிற அழகுசுந்தரம் | ஆம் | ||
2015 | ஐ | ஆம் | குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக | |
2015 | யாகாவாராயினும் நா காக்க | ஆம் | குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக | |
2015 | பாகுபலி | ஆம் | குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக (தமிழ்/ மலையாளம்/ தெலுங்கு) | |
2015 | லார்ட் லிவிங்ஸ்டன் 7000 கண்டி | ஆம் | குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக | |
2015 | தூங்காவனம் | ஆம் | குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக | |
2016 | த ஜங்கில் புக் | ஆம் | குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக | |
2016 | கம்மட்டிபடம் | ஆம் | குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக | |
2016 | தேவி | ஆம் | குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக | |
2017 | பாகுபலி 2 | ஆம் | குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக | |
2017 | செர்லக் டாம்ஸ் | ஆம் | குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக | |
2017 | மெர்சல் | ஆம் | குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக | |
2018 | கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று | ஆம் | கே.ஆர் இன்ஃபோட்டின்மெண்ட் | |
2019 | யாத்ரா | ஆம் | கே.ஆர் இன்ஃபோட்டின்மெண்ட் | |
2020 | ஆயிரம் பொற்காசுகள் | ஆம் | கே.ஆர் இன்ஃபோட்டின்மெண்ட் |
நடிகராக
- பொண்டாட்டி தேவை (1990) [7]
- காதல் வைரஸ் (2002)
குறிப்புகள்
- ↑ "டைரக்டர், தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர், விநியோகஸ்தர் 4 துறைகளில் சாதனை படைத்த 'கேயார்'எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்". Cinema.maalaimalar.com. http://cinema.maalaimalar.com/2013/08/18233448/k-r-cinema-history.html. பார்த்த நாள்: 10 February 2014.
- ↑ "Want to restore the honour and respect of TFPC: Kothandaramiah". 13 September 2013 இம் மூலத்தில் இருந்து 8 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140208165521/http://articles.timesofindia.indiatimes.com/2013-09-13/news-interviews/42012369_1_tamil-film-producers-tfpc-old-titles.
- ↑ "Clean sweep for KR group in TFPC elections!". Sify.com. 8 September 2013 இம் மூலத்தில் இருந்து 10 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130910221811/http://www.sify.com/movies/clean-sweep-for-kr-group-in-tfpc-elections-news-tamil-njind4ggjij.html.
- ↑ "சோதனைகளை வென்று 'மை டியர் குட்டிச்சாத்தான்' மகத்தான வெற்றி!". Cinema.maalaimalar.com. http://cinema.maalaimalar.com/2013/08/19232152/my-dear-kuttichathan-kr-cinema.html.
- ↑ "Spy Kids with a difference". 2004-03-16. http://www.thehindu.com/lf/2004/03/16/stories/2004031601170200.htm.
- ↑ Tamilcinema24.com (1 January 1970). "Result of Tamil Nadu Producer council election – Result of Tamil Nadu Producer Council Election – Kr- Keyar- Thanu- Viay Team- Suriya Team". Tamilcinema24.com இம் மூலத்தில் இருந்து 8 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140208165522/http://www.tamilcinema24.com/news.php?id=result-of-tamil-nadu-producer-council-election-kr-07-09-135887. பார்த்த நாள்: 10 February 2014.
- ↑ https://www.youtube.com/watch?v=iiifQ1hLpms