கோட்டியும் சென்னையாவும்

கோட்டியும் சென்னய்யாவும் (Koti and Chennayya) (கி.பி 1556 முதல் கி.பி 1591 வரை) [1] இவர்கள் புகழ்பெற்ற துளு மக்களிடையே புகழ்பெற்ற இரட்டை நாயகர்கள் ஆவர். இவர்கள் இதே பெயரில் துளு காவியத்தில் வகைப்படுத்தப்படுகிறார்கள். இது துளுவ மொழியில் உண்மையிலேயே இரண்டு நீண்ட காவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவர்களது பிறப்பிடம் தெற்கு கன்னட மாவட்டத்தின் புட்டூர் வட்டத்திலுள்ள படுமலே என்ற ஊராகும். இவர்களின் கதை துளு பாடல்களில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கர்நாடக மாநிலத்தில் துளு நாட்டின் பில்லாவா மக்களின் தேவி வைதேதிக்கு பிறந்தவர்கள். சகோதரர்களின் வீரச் செயல்களால், இவர்கள் வணங்கப்படுகிறார்கள். பாதுகாவலர்களாக நினைவில் வைக்கப்படுகிறார்கள். இவர்கள் என்மூர் அருகே நடந்த போரில் இறந்தனர். இவர்கள்து நினைவாக துளு நாடு முழுவதும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. [2]

கோட்டியும் சென்னையாவும் (சிர்கா 1556 முதல் கிபி 1591 வரை) துளு நாட்டின் இரட்டை நாயகர்கள் (கர்நாடகா, இந்தியா)
கோட்டி மற்றும் சென்னையா வேடம்
ಕೋಟಿ ಚೆನ್ನಯ.JPG
ಗರೋಡಿ.JPG
ಕಿನ್ನಿದಾರು ಗರೋಡಿ ದಪ್ಪುನಾ.JPG

மத இடங்கள்

கோயில் சிறீ பிரம்ம பைதர்கலா கரோடி சேத்திரம் அல்லது 'கரோடி' என்று பிரபலமாக அறியப்படுவது துளு சமூகத்தில் ஒரு மத இடமாகும். இது கங்கநாடியில் உள்ள கரோடியில் கோட்டி மற்றும் சென்னையாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நவீன கலாச்சாரத்தில்

  • இவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம் கன்னட மற்றும் துளு மொழிகளில் கோட்டி சென்னையா என்ற பெயரில் திரைப்படமாகத் (1973) தயாரிக்கப்பட்டது.
  • 2007 ஆம் ஆண்டில் துளுவில் மற்றொரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இது தேசிய திரைப்பட விருதுகளை (54 வது) வென்றது.
  • ஒரு கன்னட மொழியில் தொலைக்காட்சித் தொடராக டிடி சந்தன என்ற கன்னடத் தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிபரப்பப்பட்டது [3]
  • 2019 ஆம் ஆண்டில் துளுவில் "தெய் பைதேதி" என்ற மற்றொரு படம் தயாரிக்கப்பட்டது.

மேலும் காண்க

குறிப்புகள்