கோட்டகிரி வெங்கடேசுவர ராவ்

கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் ஒரு இந்திய திரைப்படதொகுப்பாளர் ஆவார். தெலுங்கு திரைப்பட இயக்குனரான இராஜமௌலியின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு இவரே திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் என். டி. ராமராவ், பி. கோபால், பாரதிராஜா போன்றோருடனும் பணியற்றிய அனுபவம் வாய்ந்தவர். ஆந்திர பிரதேச திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக ஆறு வருடங்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று பணியாற்றியுள்ளார்.

கோட்டகிரி கோபால ராவ் என்ற இவரது சகோதரர். திரைப்பட தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். இவர் நம்பர் 6, 2012ல் மரணமடைந்தார்.

சுஜாத்தா என்பவை மணந்த இவருக்கு பத்மஜா, நீரஜா என்ற இரு பெண்கள் உள்ளனர்.

விருதுகள் / நந்தி விருதுகள்

சிறந்த தொகுப்பாளருக்கான நந்தி விருது பெற்றுத்தந்த படங்கள்,..

  1. 2004: சே
  2. 2005: சுபாஸ் சந்திர போஸ்
  3. 2007: யமதொங்கா
  4. 2009: மாவீரன்
  5. 2010: டார்லிங் [1]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்