கோகிலவாணி (திரைப்படம்)
கோகில வாணி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. நடராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், ரகுவீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
கோகில வாணி | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. நடராஜன் |
தயாரிப்பு | நடராஜ் விஜயம் பர்வேர்ட் ஆர்ட் பிலிம்ஸ் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | எஸ். ஏ. நடராஜன் ரகுவீர் கே. சாரங்கபாணி எஸ். வி. சுப்பைய்யா தாம்பரம் லலிதா பி. சுசீலா ஏ. சகுந்தலா ஆர். பாரதி |
வெளியீடு | மார்ச்சு 30, 1956 |
நீளம் | 15716 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை டி. கே. சுந்தர வாத்தியார், லட்சுமணதாஸ், எஸ். டி. சுந்தரம், அ. மருதகாசி ஆகியோர் இயற்றினர். வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் திருவருட்பா ஒன்றும் திரைப்படத்தில் இடம்பெற்றது. எஸ். சி. கிருஷ்ணன், டி. எம். சௌந்தரராஜன், டி. பி. இராமச்சந்திரன், சீர்காழி கோவிந்தராஜன், மூர்த்தி, பி. எஸ். தங்கமணி, இளங்கோவன், எஸ். ஆர். இராமதாஸ், பேபி சரோஜா, தேவகி, கஜலட்சுமி, ஜிக்கி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
சுத்த தன்யாசி இராகத்தில் அமைக்கப்பட்ட சரச மோகன சங்கீதாம்ருத என்ற பாடல் பிரபலமடைந்தது.[3]
எண். | பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | கம்பியிலே வாசிக்கிறேன் | பேபி சரோஜா, தேவகி, மூர்த்தி, பி. எஸ். தங்கமணி, இளங்கோவன், எஸ். ஆர். இராமதாஸ் | டி. கே. சுந்தர வாத்தியார் | 03:06 |
2 | ஊனுயிர்கள் உள்ளமெலாம் | எஸ். சி. கிருஷ்ணன் | ||
3 | ஜிலு ஜிலு மிட்டாய் பாருங்கோ | லட்சுமணதாஸ் | ||
4 | அம்மையப்பா உன்னை | டி. எம். சௌந்தரராஜன் | ||
5 | தடித்த ஓரு மகனைத் தந்தாய் | இராமலிங்க சுவாமிகள் | ||
6 | வஞ்சனையறியா வானம்பாடி | டி. பி. இராமச்சந்திரன் & கஜலட்சுமி | எஸ். டி. சுந்தரம் | |
7 | சரச மோகன சங்கீதாம்ருத | சீர்காழி கோவிந்தராஜன் | 04:12 | |
8 | அன்பொளி வீசி | 03:17 | ||
9 | அழகோடையில் நீந்தும் அன்னம் | சீர்காழி கோவிந்தராஜன் & ஜிக்கி | 04:43 | |
10 | திருவே என் தேவியே | அ. மருதகாசி | ||
11 | உலகம் புகழும் எழில் | குழுவினருடன் ஜிக்கி | ||
12 | மாலையிலே மனசாந்தி | சீர்காழி கோவிந்தராஜன் |
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170522092448/http://www.lakshmansruthi.com/cineprofiles/1956-cinedetails9.asp. பார்த்த நாள்: 2022-05-04.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 105.
- ↑ "Sarasa Mohana" (in ஆங்கிலம்). http://ragasinfilmmusic.blogspot.in/2011/10/sarasa-mohana-kokilavani.html.