கொலை அரங்கம் (புதினம்)
கொலை அரங்கம், சுஜாதாவால் குங்குமம் இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகம் மற்றும் விசா பப்ளிகேஷன்ஸால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
கொலை அரங்கம் | |
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம் [1] விசா பப்ளிகேஷன்ஸ்[2] |
வெளியிடப்பட்ட நாள் | 2010 |
ISBN | 978-81-8493-449-6 |
கதைக் கரு
பெரும்சொத்துக்கு வாரிசுகளான நால்வரில் இருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்கள். மூன்றாவது வாரிசு படுகொலை செய்யப்படுகிறார். மருத்துவமனையில் இருக்கும் இருவரின் மீதும் தாக்குதல் முயற்சி நடைபெறுகிறது. கொலை முயற்சி செய்பவன் யார் என்பதை வக்கீல் கணேஷும், வசந்தும் இணைந்து துப்பறியும் கதை.
கதை மாந்தர்கள்
- கணேஷ்
- வசந்த்
- உத்தம்
- பீனா
- இன்ஸ்பெக்டர் பாண்டியன்
- ராஜசந்திரன்
- போராளி குமேரசன் மற்றும் பலர்.