கொக்கலை
கொக்கலை (Koggala) என்பது இலங்கையின் தென் மாகாணத்தில் காலியிலிருந்து பத்து மைல் தூரம் சென்றவுடன் காலி - மாத்தறை வீதியில் காணப்படும் சிறியதொரு கிராமமாகும்.
Koggala | |
---|---|
நகரம் | |
Near Koggala beach | |
Country | இலங்கை |
Province | Southern Province |
District | காலி மாவட்டம் |
நேர வலயம் | Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30) |
• கோடை (பசேநே) | Summer time (ஒசநே+6) |
தொலைபேசி குறியீடு | 228 |
மிகப் புராதனக் கவிஞர்களின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கொக்கலக் கிராமம், சிங்களப் படைப்பாளர்களிடையே “இசை“ மூலமாகவே முக்கியத்துவம் பெற்றது. நீண்ட வரலாற்றை உறுதிப்படுத்தும் பெரும் முருகைக் கற்பாறையொன்று இங்கு காணப்படுகிறது. கிராம மக்கள் இதனை “முருகைக்கல் தேவாலயம்“ என அழைக்கின்றனர்.
“எத்தனையோ விதமாக இக்கற்பாறையை உடைக்க முற்பட்டபோதும், அசைந்துகொடுக்காமல் பெருவலிமை கொண்ட யுத்த வீரனாய் அக்கல் நிமிர்ந்து நிற்பது அதிசயத்திற்குரியது“ என மார்ட்டின் விக்கிரமசிங்க தனது “எங்கள் கிராமம்“ நூலில் குறிப்பிட்டு்ளளார். கொக்கலைக் களிமுகம் ஒரு பக்கம் கடலினாலும் மறுபக்கம் அழகிய நதியினாலும் ஒன்றிணைந்த நிலப்பகுதியாகும்.
"7 – 8 ஆயிரம் ஆண்டுகளேனும் பழைமை மிக்கது கொக்கலை – கிராமம் எனக்கூறக்கூடிய முறையில் தரையின் மேற்பகுதியில் எவ்வித ஆதாரங்களும் இல்லாதபோதும், நிலக்கீழ் அமைந்துள்ள தொடரூந்து வீதிக்கருகாமையிலுள்ள குன்றே சாட்சியளிக்கிறது…. முழுக் கிராமத்தையும் ஒருகுடைக்கீழாக்கும் தென்னை மரங்களிலிருந்தும், ஏனைய மரங்களிலிருந்தும் வீழும் இலை குழைகளும், மலர்களும் கிழம்தட்டி இறந்துபோகின்றன. மிருகங்கள் கொஞ்சம் நாட்கள் உயிர்வாழ்ந்து இறக்கின்றன. மனிதர்கள் மடைமையினாலும் வறுமையினாலும் துன்பத்திற்கு மேல் துன்பம் அநுபவித்து இறந்துமடிகின்றனர்."[1]
மேற்குறிப்பிலிருந்து மார்ட்டின் விக்கிரமசிங்கவின் கூற்றிலிருந்து, கொக்கல கிராமம் 1944 களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
இங்கு பிறந்து புகழ் பெற்றோர்
- மார்ட்டின் விக்கிரமசிங்க, எழுத்தாளர்
போக்குவரத்து
மேற்கோள்கள்
- ↑ மார்ட்டின் விக்கிரமசிங்க, கிராமப்புறழ்வு (கம்பெரலிய) பக். 1, தினமின பத்திரிகை, மார்ட்டின் விக்கிரமசிங்க நூதனசாலையிலிருந்து பெற்ற தகவல்கள்
வெளியிணைப்புகள்
- மார்ட்டின் விக்கிமசிங்க பற்றிய இணையத்தளம் பரணிடப்பட்டது 2021-01-26 at the வந்தவழி இயந்திரம்