பேராசிரியர். கே. மணி, வேளாண்மைக் கல்வி பேராசிரியரும், தமிழ் எழுத்தாளரும் ஆவார். இவர் கோயம்புத்துர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கோயம்புத்தூர் பி. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாவரவியல் பேரராசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். முன்னர் இவர் கலைக் கதிர் இதழின் ஆசிரியராக இருந்துள்ளார். மேலும் இவர் கோயம்புத்தூர் அகில இந்திய வானொலி நிலையம் மற்றும் இந்திரா காந்தி திறந்த பல்கலைக்கழகத்தின் ஞான வாணி எனும் எப் எம் வானொலி மூலம் அறிவியல் மற்றும் ஆன்மிகம் பற்றிய பிரபலமான மற்றும் வளமான பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் உள்ளார்.

இவர் வேதாந்தம் மற்றும் அறிவியல் குறித்து 75இக்கும் மேற்பட்ட நூல்களை தமிழில் எழுதியுள்ளார்.[1]அறிவியல், ஆன்மீகம், சமூகவியல், மானுடவியல், உளவியல் மற்றும் மனிதநேயம் மற்றும் அறிவியலின் பிற பிரிவுகள் தொடர்பான பொது கேள்விகளுக்கு இவர் பொது ஊடகங்கள் மூலம் விளக்கம் தருகிறார். மேலும் வேதாந்தம் மற்றும் அறிவியல் தொடர்பாக வாரந்திர உரைகளை காணொளி மூலம் வழங்குகிறார். [2]

பேராசிரியர் கே. மணி எழுதிய சில நூல்கள்

  1. நான் யார்? (ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி)
  2. மனம் அது செம்மையானால்
  3. அஷ்டா வக்ர கீதை (விளக்கவுரை)
  4. மந்திரங்கள்: பயனுள்ள மந்திரங்களின் விரிவான விளக்கங்கள்
  5. வேதத்தில் என்ன இருக்கிறது?
  6. ஸ்ரீ ருத்ரம்: விரிவுரை
  7. அபரோக்ஷ அனுபூதி: ஸ்ரீ சங்கராச்சாரியார் அருளியது
  8. ஆத்மபோதம்: விளக்கவுரை
  9. கீதா ஸாரம்: ஸ்ரீமத் பகவத் கீதையின் கருத்துப்பிழிவு
  10. முண்டகோபநிஷத்: விளக்கவுரை
  11. கைவல்யோபநிஷத்: விளக்கவுரை
  12. கடோபநிஷத்: விரிவுரை
  13. ஈசா’வாஸ்ய உபநிஷத்: விளக்கவுரை
  14. ஐதரேய உபநிஷத்: விளக்கவுரை
  15. கேன உபநிஷத்: விளக்கவுரை
  16. பதஞ்சலி யோக சூத்திரம்: மூலமும் உரையும்
  17. சிவமானஸ பூஜா: ஸ்ரீசங்கரர் அருளியது
  18. அத்வைத மகரந்தம்
  19. திடுக்கிட வைக்கும் ஃபிஸிக்ஸ்
  20. அதிபரிமாண ஆகாயம்: இடம், காலம், பொருள், விசை ஆகிய நான்கின் ஐக்கியத் தத்துவம்
  21. நான் உலகம் கடவுள்: அறிவியல் பூர்வமான ஆன்மிகத் தேடல்
  22. கோமாவில் நான்
  23. நாடி பிராணன் குண்டலினி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கே._மணி&oldid=3923" இருந்து மீள்விக்கப்பட்டது