கே. டி. காந்திராசன்

இந்திய-மரபு ஓவியமீட்டெடுப்பில் முக்கிய பணிகளைச் செய்து வருபவர் கே.டீ.காந்திராசன் . இவர் ஒரு ஓவியர் , கலை, வரலாற்று ஆய்வாளர்,தொல்பொருள் கண்டறிவாளர். இந்தியாவின் கோவில் நகரங்களிலும் மலைப்பகுதிகளிலும் குகைப் புறங்களிலும் உள்ள சுவரோவியங்களையும் பாறை ஓவியங்களையும் ஆதி பழங்குடி ஓவியங்களையும் நிறைய மீட்டெடுப்பு செய்துள்ளார்.[1]

கே. டி. காந்திராசன்
காந்திராசன்.jpg

புதிய கண்டுபிடிப்பு(செப்டம்பர் 2009)

விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் திருக்கோயிலூருக்கு அருகிலுள்ள கொல்லூரில் ஒரு பெரிய டாவுல்மன் அமைப்பைக் கண்டறிந்துள்ளார் காந்திராசன். பாறை ஓவியங்கள் (petroglyph) வரையப்பட்டுள்ள டாவுல்மன் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே இரண்டாவது முறை.[2] கொல்லூர் டோல்மனில் மொத்தம் நான்கு பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

பிற கண்டுபிடிப்புகள்

மே 2009

நீலகிரி மாவட்டம் மோயாறு நதியை ஒட்டிய கள்ளம்பாளையத்தின் அருகிலுள்ள பேருதொரப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட டோல்மன் வகை நினைவுக்கல்லில் பாறை ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கி.மு. 1000 முதல் கி.மு.300 வரையிலான கற்கால கட்டத்தில் (megalithic period) செதுக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த நினைவுக்கல் வட்ட வடிவத்தில் இருப்பது சிறப்பு; பொதுவாக டோல்மன்கள் செவ்வக வடிவில் உள்ளவை. இது ஒரு அரிய, அசாத்தியமான கண்டுபிடிப்பு என்று கூறுகிறார் இந்த மீட்பு-ஆராய்ச்சியைத் தலைமையேற்று நடத்தி வரும் கே.டி.காந்திராஜன்.[3]

இவற்றையும் காண்க

சுட்டுகள்

"https://tamilar.wiki/index.php?title=கே._டி._காந்திராசன்&oldid=6927" இருந்து மீள்விக்கப்பட்டது