கே. ஜி. இராதா மணாளன்
கே. ஜி. இராதா மணாளன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகேயுள்ள கண்டிநல்லூரில் பிறந்தவர். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். எழுத்தாளர், பத்திரிகையாளர். மாலைமணி, சுதந்திர நாடு, நவ இந்தியா, எங்கள் நாடு போன்ற பல நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 25க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “திராவிட இயக்க வரலாறு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
நூல்கள்
- அரக்குமாளிகை (நாடகம்), 1952 [1]
- அழகுராணி [2]
- எழிலரசி கிளியோபாட்ரா, திராவிடப்பண்ணை, திருச்சி
- களபலி பாரிநிலையம், சென்னை.[3]
- கானல்நீர் (வரலாற்றுக்கதை), 1953, பாரி நிலையம், சென்னை.
- சபதம், 1952 பாரி நிலையம், சென்னை [4]
- சிந்தனைத்துளிகள் பாரிநிலையம், சென்னை [5]
- பசி (கட்டபொம்மன் வரலாற்றுக் கற்பனை), திராவிடப்பண்ணை, திருச்சி
- பாண்டியன் திருமேனி
- பெண் பாரிநிலையம், சென்னை.[3]
- மறவர்குலத்து மணிப்புறா (இனமுழக்கம் இதழில் தொடராக வெளிவந்தது) [6]
- திராவிட இயக்க வரலாறு
- வெங்கண்ணா [2]
ஆதாரம்
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:23-11-1952, பக்கம் 6
- ↑ 2.0 2.1 திராவிடநாடு (இதழ்) நாள்:22-12-1952, பக்கம் 2
- ↑ 3.0 3.1 திராவிடநாடு (இதழ்) நாள்:12-8-1951, பக்கம் 12
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:1-6-1952, பக்கம் 12
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:9710-1951, பக்கம் 9
- ↑ இனமுழக்கம், 16-12-1960, பக்.6