கே. சி. லோகேசுவரன்

கணபதிப்பிள்ளை கதிரவேல்பிள்ளை லோகேசுவரன் (Kanapathipillai Cathiravelpillai Logeswaran) இலங்கைத் தமிழ் அரச அதிகாரியாவார். இவர் மேல் மாகாண ஆளுநராகப் பணியாற்றினார். தற்போது மேல் மாகாண ஆளுநராக 2018 ஏப்ரல் 12 முதல் பொறுப்பேற்றுள்ளார்.[1]

கே. சி. லோகேஸ்வரன்
K. C. Logeswaran
10-வது வடமேல் மாகாண ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 ஏப்ரல் 2018
முன்னவர் அமரா பியசீலி இரத்திநாயக்கா
6வது மேல் மாகாண ஆளுநர்
பதவியில்
23 சனவரி 2015 – 11 ஏப்ரல் 2018
முன்னவர் அலவி மௌலானா
பின்வந்தவர் ஏமகுமார நாணயக்காரா
தென் கொரியாவுக்கான இலங்கைத் தூதுவர்
பதவியில்
டிசம்பர் 1999 – பெப்ரவரி 2003
தனிநபர் தகவல்
தேசியம் இலங்கைத் தமிழர்
படித்த கல்வி நிறுவனங்கள் இலங்கைப் பல்கலைக்கழகம்
தொழில் அரசு அதிகாரி

ஆரம்ப வாழ்க்கை

லோகேசுவரன் யாழ்ப்பாணம், பரி யோவான் கல்லூரியில் கல்வி கற்றவர்.[2][3] பள்ளிப் படிப்பை அடுத்து இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.[4]

பணி

பட்டப் படிப்பின் பின்னர் லோகேசுவரன் இலங்கை நிருவாக சேவையில் இணைந்தார்.[3] இலங்கையின் வவுனியாவில் 1963 முதல் 1968 வரை பல்வேறு பிரதேச செயலகங்களில் பணியாற்றினார்.[5] 1980 முதல் 1981 வரை யாழ் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றினார்.[4] 1981 அக்டோபரில் வவுனியா மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக 1988 சூலை வரை பணியாற்றினார்.[6] பின்னர் இலங்கைத் தேசியக் காவல்படையின் ஆணையத்தின் செயலர், இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இயக்குநர், இலங்கை நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் எனப் பல்வேறு அரசு அலுவலகங்களிலும் மூத்த அரச அதிகாரியாகப் பணியாற்றினார்.[3][4][7] 1999 இல் தென் கொரியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு, 2003 பெப்ரவரி வரை மணியாற்றினார்.[4][8]

ஆளுநர்

2015 சனவரி 23 அன்று இலங்கையின் புதிய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன லோகேசுவரனை மேல் மாகாண ஆளூநராக நியமித்தார்.[9][10] 2018 ஏப்ரல் 12 இல் வடமேற்கு மாகாண ஆளுநராக அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.[11]

மேற்கோள்கள்

  1. "7 new Governors take oath before President". நியூஸ் ரேடியோ. 12-04-2018. https://www.newsradio.lk/local/7-new-governors-take-oath-before-president. பார்த்த நாள்: 13-04-2018. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Sivathasan, S. (10 ஆகத்து 2013). "My Reminiscences Of St. John’s College, Jaffna". Colombo Telegraph. https://www.colombotelegraph.com/index.php/my-reminiscences-of-st-johns-college-jaffna/. 
  3. 3.0 3.1 3.2 "SLT Lanka Bell merger off". சண்டே ஒப்சர்வர். 29 பெப்ரவரி 2004 இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924112029/http://www.sundayobserver.lk/2004/02/29/bus06.html. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Annual Report 2003". ஸ்ரீ லங்கா டெலிகொம். http://www.slt.lk/sites/default/files/reports-html/annual/2003/html_vertion/directors/directors.htm. 
  5. Wijayadasa, K. H. J. (21 சூலை 2013). "DRO (1939 – 1963) Man for All Seasons". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304053322/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=84019. 
  6. "Former Government Agents, Vavuniya District". Vavuniya District Secretariat இம் மூலத்தில் இருந்து 2015-01-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150128113217/http://www.vavuniya.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=71Itemid=63&lang=en. 
  7. Hadjirin, Arshad M. (9 மார்ச் 1997). "Postmasters hit by hike". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/970309/newsm.html. 
  8. "Welfare Benefits Board gets new Head". டெய்லிநியூஸ். 28 அக்டோபர் 2003. http://archives.dailynews.lk/2003/10/28/new30.html. 
  9. "Three new governors appointed". டெய்லிமிரர்]. 23 சனவரி 2015. http://www.dailymirror.lk/62019/oneryner. 
  10. "New Governors". டெய்லிநியூஸ். 24 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150125140829/http://www.dailynews.lk/?q=local/new-governors. 
  11. "New Governors take oaths before President Sirisena". The Sunday Times. sundaytimes.lk. 12-04-2018. http://www.sundaytimes.lk/article/1042054/new-governors-take-oaths-before-president-sirisena. பார்த்த நாள்: 12-04-2018. 
"https://tamilar.wiki/index.php?title=கே._சி._லோகேசுவரன்&oldid=25228" இருந்து மீள்விக்கப்பட்டது