கே. என். சீனிவாசன்

கே. என். சீனிவாசன் (K. N. Srinivasan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் சென்னை மாநகரத் தந்தையாகப் பணியாற்றியவர் ஆவார்.[1] இவர் நவம்பர் 1956ஆம் ஆண்டு முதல்[2] டிசம்பர் 1957 வரை இப்பதவியிலிருந்தார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

சீனிவாசன் செப்டம்பர் 20, 1914இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தார். சென்னை, கிறித்துவக் கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் உயர்கல்வி பயின்றார் . சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக 1945இல் சேர்ந்தார்.

அரசியல் வாழ்க்கை

சீனிவாசன் தனது ஆரம்பக் காலத்திலிருந்தே இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். இவர் தமிழக காங்கிரசு குழுவின் உறுப்பினராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். செங்கல்பட்டு மாவட்ட மாநாட்டிலும் உறுப்பினராக இருந்தார். நவம்பர் 29, 1956இல், இவர் சென்னை மாநகரத் தந்தையாக நியமிக்கப்பட்டார்[2] மற்றும் டிசம்பர் 1957 வரை பணியாற்றினார். இவருக்குப் பின் தாரா செரியன் வெற்றி பெற்று இபபதவியினை வகித்தார்.

மேற்கோள்கள்

  1. Civic Affairs, Volume 5, Issues 5-8; Published by P. C. Kapoor at the Citizen Press, 1957
  2. 2.0 2.1 "dated November 29, 1956: New Mayor of Madras". The Hindu. 29 November 2006. http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/dated-november-29-1956-new-mayor-of-madras/article3054135.ece. பார்த்த நாள்: 2 March 2014. 
முன்னர்
வி. ஆர். இராமநாத ஐயர்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1956-1957
பின்னர்
தாரா செரியன்
"https://tamilar.wiki/index.php?title=கே._என்._சீனிவாசன்&oldid=27420" இருந்து மீள்விக்கப்பட்டது