கேசரி, வானரம்
கேசரி (Kesari) இராமாயணக் காவியம் கூறும் வானரக் கூட்டத்தின் ஒரு ஆற்றல் மிகு படைத்தலைவர்களில் ஒருவர் ஆவார். இவரின் மனைவியின் பெயர் அஞ்சனை ஆகும். இராமனின் அன்புக்குப் பாத்திரமான அனுமான் இவரது மகன் ஆவார்.[1]
வரலாறு
கேசரி – அஞ்சனை இணையர் குழந்தை வரம் வேண்டி ருத்திரனைக் நோக்கிப் பல்லாண்டுகள் தவமிருந்தனர். சிவபெருமானின் தெய்வீக அம்சத்தை வாயு பகவான், அஞ்சனையின் கருவில் வைத்ததின் மூலம் பிறந்தவர் அனுமார். [2] .
தற்கால கர்நாடகாவில் கோகர்ணம் எனும் புனித இடத்திலிருந்த முனிவர்களை வாட்டி வதைத்த சம்பசாதனன் எனும் அரக்கனைக் கேசரி வீழ்த்தி முனிவர்களின் துயரங்களை நீக்கினார்.[3]
இராம-இராவணப் போரில் கேசரி, சுக்கிரீவனின் வானரப்படைகளின் ஒரு பிரிவின் படைத்தலைவராகச் செயல்பட்டவர்.
மேற்கோள்கள்
- ↑ Keśavadāsa; Krishna Prakash Bahadur (1 January 1976). Selections from Rāmacandrikā of Keśavadāsa. Motilal Banarsidass Publ.. பக். 22–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-2789-9. https://books.google.com/books?id=yQHpEQ8HkRMC&pg=PA22. பார்த்த நாள்: 14 July 2012.
- ↑ Pollet, Gilbert (January 1995). Indian Epic Values: Ramayana and Its Impact: Proceedings of the 8th International Ramayana Conference, Leuven, 6–8 July 1991 (Orientalia Lovaniensia Analecta). Peeters. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-6831-701-5.
- ↑ Rama Balike Bhat (30 September 2006). The Divine Anjaneya: Story of Hanuman. iUniverse. பக். 6–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-595-41262-4. https://books.google.com/books?id=uvxLjenEZNQC&pg=PA6. பார்த்த நாள்: 14 July 2012.