கெஸ்ட் அவுஸ்
கெஸ்ட் அவுஸ் (Guest House) என்பது 1999 ஆம் ஆண்டு வெளியான தமிழ் வயதுக்கு வந்தவர்களுக்கான திகில் திரைப்படம் ஆகும். பி. ஜி. இராஜ்மோகன் எழுதி இயக்கிய இப்படத்தில் பாபு கணேஷ், சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலா சிங், சி. ஆர். சரஸ்வதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை எஸ். பி. பூபதி அமைத்துள்ளார். படம் 1999 சூன் மாதம் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.[1][2]
கெஸ்ட் அவுஸ் | |
---|---|
இயக்கம் | பி. ஜி. இராஜமோகன் |
தயாரிப்பு | எம். எம். பி |
கதை | துரை லியோ |
இசை | எஸ். பி. பூபதி |
நடிப்பு | பாபு கணேஷ் சங்கீதா பாலா சிங் |
ஒளிப்பதிவு | சூரிய பிரகாஷ் ராவ் |
படத்தொகுப்பு | சி. மணி |
கலையகம் | கலைவாணி கம்பைன்ஸ் |
வெளியீடு | 4 சூன் 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- பாபு கணேஷ்
- சங்கீதா
- பாலா சிங்
- சி. ஆர். சரஸ்வதி
- பிரீத்தி
- பரூக்கான்
- கத்தீஷ் காந்தி
- விஜயராஜ்
- மதுரை சக்தி
- நிலா
- கனகபிரியா
- டான்சர் கலா
- சசிகலா
- சிவசிறீ
வெளியீடு
இந்த படம் பின்னர் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்காக அதே பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[3]
ராஜ்மோகன் பின்னர் லவ் ஸ்டோரி என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டில் புதுமுகங்களைக் கொண்டு மற்றொரு படத்தைத் தொடங்கினார், ஆனால் அது திரையரங்கில் வெளிவரவில்லை.[4]
மேற்கோள்கள்
- ↑ "Guest House". https://spicyonion.com/movie/guest-house/.
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 19 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170919094934/http://profiles.lakshmansruthi.com/index1.php?uid=173.
- ↑ Narjis Movie Masala (12 December 2014). ""Guest House" - Hindi Dubbed Horror Movie - Babu Ganesh - Rashika". https://www.youtube.com/watch?v=foJFibdTBAE.
- ↑ https://web.archive.org/web/20070216075839/http://www.chennaionline.com/film/Newlaunches/2005/03lovestory.asp