கெற்பெலி

கெற்பெலி, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஒரு ஊர்.[1] இதன் மேற்கில் பாலாவியும், வடக்கில் கொடிகாமம், உசன், கரம்பகம் என்னும் ஊர்களும், கிழக்கில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிளாலியும் உள்ளன. தெற்குப் பக்கத்தில் யாழ்ப்பாணக் கடலேரி உள்ளது.[2]

நிறுவனங்கள்

இவ்வூரில் கெற்பெலி அரசாங்க தமிழ்க் கலவன் பாடசாலை உள்ளது. இங்கே கெற்பெலி பரமசிவன் கோயில், சம்பாவெளி வீரகத்திப் பிள்ளையார் கோயில், கலிங்கன் சாட்டி முருகன் கோயில், வீரபத்திரர் கோயில் போன்ற கோயில்கள் உள்ளன.[3]

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=கெற்பெலி&oldid=39942" இருந்து மீள்விக்கப்பட்டது