கெத்சீ சண்முகம்

கெத்சீ சண்முகம் (1934) ஒரு இலங்கைத் தமிழ்ப்பெண். நாவலப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஒரு தமிழாசிரியர். சமூகச் செயற்பாட்டாளர். உளவியல் ஆலோசகர். இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சேவையை வழங்கியவர். தனது சேவைகளுக்காக ரமோன் மக்சேசே விருது[1] விருதைப் பெற்றுக் கொண்டவர்.[2]

குடும்பம்

இவரின் தந்தை தேயிலைத்தோட்டத்தில் எழுத்தர் ஆகக் கடமையாற்றியவர். தாயார் இவர் 15 வயதாக இருக்கும் போதே இறந்து விட்டார். இவரது கணவர் முத்துவேலு சண்முகம். இவருக்கு இரு குழந்தைகளும், மூன்று பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள்.

கல்வி

இவர் கண்டி Mowbray கல்லூரியில் கல்வி பயின்றார். தனது 17வயதிலேயே 1951 இல் ஆசிரியரானார்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. The Hindu 27 July 2017. Retrieved 26 September 2017
  2. Gethsie Shanmugam a Magsaysay winner - The Daily Mirror (Sri Lanka) 27 July 2017. Retrieved 26 September 2017.-
"https://tamilar.wiki/index.php?title=கெத்சீ_சண்முகம்&oldid=24048" இருந்து மீள்விக்கப்பட்டது