கூடன்மாலை
கூடன்மாலை (கூடல் மாலை) என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]
மான் போன்ற பெண் ஒருத்தி ஒருவனோடு கூடியிருக்கத் தானே அவனை நாடி வருவதாகப் பாடுவது கூடன்மாலை சிற்றிலக்கியம் ஆகும்.
மான் வலிய மேவ வரல் கூடல் மாலையாம் என்பது நூற்பா. [2]
மேற்கோள்
- ↑ பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 486
- ↑ நூற்பா எண் 9.