கு. அண்ணாமலை

அண்ணாமலை(ஆங்கிலம்:Dr.KM.Annamalai) அவர்கள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மேலசிவபுரி என்னும் இடத்தில் திரு.குமரப்பன் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவர் இயன்முறைமருத்துவராக அணைவராலும் அறியப்படுகிறார்.[1]

திரு.கு.அண்ணாமலை
பிறப்புபுதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிமருத்துவர் ஆசிரியர், துறை தலைவர்
அறியப்படுவதுஇயன்முறைமருத்துவர்
சொந்த ஊர்மேலசிவபுரி
பட்டம் வேந்தர்
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்[1]
பெற்றோர்திரு.குமரப்பன்
வலைத்தளம்
அலுவல் வலைதளம்

கல்வி

இவர் இயன்முறைமருத்துவத்தில் இளங்கலை பட்டம் (ஆங்கிலம்:BPT) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மூலமாகவும் முதுகலை பட்டம் (ஆங்கிலம்:MPT) சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம் மூலமாகவும் பெற்றார். [1]


மேலும் இவர் பல குறுகிய கால பாடத்திட்டங்களை பல்வேறு நாடுகளில் பயின்றுள்ளார். அவைகள் முறையே இத்தாலி நாட்டில் முகபாவம் பற்றி, ஐக்கிய இராச்சியம் நாட்டில் நீர்ச்சிகிச்சை பற்றி, ஜெர்மனி நாட்டில் உடலியக்கவியல் பற்றி, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மண்டைச்சிகிச்சை, உலர் ஊசிச்சிகிச்சை பற்றி மற்றும் பரகுவை நாட்டில் இயக்கவியல் சமநிலை நிலைத்தன்மை பற்றி பயின்றுள்ளார்.[1]

பணி விவரம்

அண்ணாமலை அவர்கள் அகமதாபாத் நகரில் இயங்கி வரும் அப்பல்லோ மருத்துவமணையின் இயன்முறைமருத்துவத் துறை தலைவராக பணியாற்றி வருகிறார். [2] மேலும் அலைன்ஸ் பிசியோசொலியூசனின் இயக்குனராகவும் உள்ளார். இவர் அவசர சிகிச்சை மற்றும் இருதய நுரையீரல் அறிவியல் துறையில் தமது மருத்துவம் சார்ந்த சிகிச்சை மற்றும் கல்வி திட்டத்தில் 17 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

மேலும் இவர் 2011 ஆம் ஆண்டு உலக மட்டை விளையாட்டு போட்டியில் இந்திய மட்டை விளையாட்டு ஆணியின் இயன்முறைமருத்துவர்கள் குழுவில் பணியாற்றினார். இந்திய இயன்முறைமருத்துவ சங்கம் மற்றும் ஐக்கிய இராச்சியம் நாட்டின் உடல்நல சுகாதாரத்துறை சபையின் உறுப்பினர் ஆவார்.[1]

வேந்தராக

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் நாள் இயன்முறைமருத்துவர் அண்ணாமலை அவர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமித்தது[1][3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ""வேந்தர்"".
  2. ""துறை தலைவர்".
  3. http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/may/04/physio-becomes-gri-chancellor-in-dindigul-1600813.html
"https://tamilar.wiki/index.php?title=கு._அண்ணாமலை&oldid=130029" இருந்து மீள்விக்கப்பட்டது