குற்றம் 23
குற்றம் 23 (English: Crime 23) என்பது 2017 ஆண்டைய ஒரு தமிழ் குற்றவியல் சாகசத் திரைப்படமாகும். இப்படத்தை அறிவழகன். இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய் மஹிமா நம்பியார் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். மேலும், வம்சி கிருஷ்ணா, அரவிந்த் ஆகாஷ், தம்பி ராமையா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை அருண் விஜய் மற்றும் இந்திர் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படம் 2017 மார்ச் 3 அன்று வெளியானது.[1]
குற்றம் 23 | |
---|---|
இயக்கம் | அறிவழகன் |
தயாரிப்பு | இந்தர் குமார் |
மூலக்கதை | குற்றம் 23 இராஜேஷ்குமாரின் கதை |
திரைக்கதை | அறிவழகன் |
இசை | விஷால் சந்திரசேகர் |
நடிப்பு | அருண் விஜய் மஹிமா நம்பியார் |
ஒளிப்பதிவு | பாஸ்கரன் கே. எம். |
படத்தொகுப்பு | புவன் சீனிவாசன் |
கலையகம் | ரிதன் தி சினிமா பீபுள் |
வெளியீடு | மார்ச்சு 3, 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- அருண் விஜய் - வெற்றிமாறன் ஐபிஎஸ்
- மஹிமா நம்பியார் -தென்றல்
- தம்பி ராமையா -திருப்பதி
- அரவிந்த் ஆகாஷ்
- வம்சி கிருஷ்ணா -ஜான் மேத்யு
- அமித் பார்கவ் -அரவிந்த்
- அபிநயா -ஸ்ரீ அபிநயா
- கல்யாணி நடராஜன் -துளசி
- சுஜா வருணி - ஜான் மேத்யுவின் மனைவி
- மிஷா கோசல் - ஜெசிகா
- விஜயகுமார் - ஆணையாளர்
கதைச் சுருக்கம்
செயற்கைக் கருத்தரிப்புக்குப் பின்னால் நடக்கும் முறைகேடுகளை மையமாகக் கொண்ட குற்றவியல் கதை இது. பாவ மன்னிப்பு அளிக்கும் பாதிரியார் ஒருவர் மர்மமான முறையில் தேவாலயத்தில் இறக்கிறார். அதே நேரத்தில் பாவமன்னிப்பு கேட்டு அங்கே வரும் ஒரு பெண்ணும் காணாமல் போகிறார். இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்ற நோக்கில் உதவி ஆணையர் வெற்றிமாறன் (அருண் விஜய்) விசாரணையில் இறங்குகிறார். சம்பவம் நடக்கும்போது தேவாலயத்துக்குச் சென்ற தென்றல் (மஹிமா) முதலான சிலர் கூறும் தகவல்களை வைத்துக்கொண்டு விசாரணையை முன்னெடுக்கிறார். கருவுற்ற பெண்கள் சிலர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்வது இந்த வழக்கை மேலும் சிக்கலாக்குகிறது. இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதுதான் இத்திரைப்படத்தின் மீதிக் கதை.
மேற்கோள்கள்
- ↑ "High on Hitchcock". http://www.thehindu.com/features/cinema/High-on-Hitchcock/article16072138.ece. பார்த்த நாள்: 26 February 2017.