குறள் தாழிசை
குறள் தாழிசை தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று. [1]இது குறள் வெண்பாவின் இனம்.
இதில் இரண்டு வகை உண்டு. ஈற்றடி குறைந்து வருவது ஒருவகை. [2] செப்பலோசை சிதைந்து வருவது மற்றொருவகை.[3]
- எடுத்துக்காட்டு
வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டையள் அல்லள் படி
தக்கயாகப்பரணி நூலில் உள்ள 815 பாக்களும் குறள் தாழிசையாக அமைந்துள்ளன.
உசாத்துணை
அடிக்குறிப்பு
- ↑
‘அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும்
சந்தழி குறளும் தாழிசைக் குறளே.’ (யாப்பருங்கலம் நூற்பா 64) - ↑
‘நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற்
கண்ணினான் அடியே அடைவார்கள் கற்றவரே’. - ↑
‘தண்ணந் தூநீர் ஆடச் சேந்த
வண்ண ஓதி கண்’.