குருகுலத்தரையன்

குருகுலத்தரையன் சுந்தர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் முதல் அமைச்சர் பதவியில் இருந்தவனாவான்.தடங்கண்ணிச் சிற்றூரில் பிறந்த இவன் இராமநாதபுரம் தித்தங்காலிலுள்ள திருமால் கோயிலைக் கட்டினான். சிவன் கோயிலையும் கட்டினான் என்பது குறிப்பிடத்தக்கது. 1232 ஆம் ஆண்டளவில் கற்கோயில்களாகச் செய்து நாளும் வழிபாடு செய்ய சந்தி என்ற சடங்கினை ஏற்படுத்தினான்.தென்னவன் சிற்றூர் என்ற ஊரை இறையிலியாக அளித்தான் இவன் என்பது குறிப்பிடத்தக்கது.இவனது பெயரானது அரசன் வழங்கிய சிறப்புப் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"https://tamilar.wiki/index.php?title=குருகுலத்தரையன்&oldid=42321" இருந்து மீள்விக்கப்பட்டது