கும்பகோணம் வினைதீர்த்த தெரு விசுவநாதசாமி கோயில்

கும்பகோணம் வினைதீர்த்த தெரு விசுவநாதசாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேட்டைச்சாலைக்காரத் தெருவின் அருகேயுள்ள வினை தீர்த்த தெருவில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். முன்னர் இத்தெரு வினைதீர்த்த செட்டி அக்கிரகாரம் என அழைக்கப்பட்டது. [1]

மூலவர் கருவறை
செங்கல் கட்டுமானம்
விநாயகர்

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக விசுவநாதசுவாமி உள்ளார். இடது புறம் விசாலாட்சியம்மன் சன்னதி உள்ளது. இருவர் சன்னதிகளுக்கும் முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. பழைய செங்கல் கட்டுமானம் பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் வகையில் உள்ளது.

விநாயகர்

இக்கோயிலுக்கு எதிரே விநாயகர் தனியாக ஒரு சன்னதியில் உள்ளார்.

திருப்பணி

தற்போது (செப்டம்பர் 2015) இக்கோயிலில் குடமுழுக்கிற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

மேற்கோள்கள்

  1. புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992