கும்பகோணம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்
கும்பகோணம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் கும்பகோணத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
டபீர் குளம் படித்துறையில் ஆற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலை சித்திவிநாயகர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கின்றனர். [1]
இறைவன்
இக்கோயிலில் லிங்கத் திருமேனியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளார். அருகே நந்தியும், பலிபீடமும் உள்ளன.
பிற தெய்வங்கள்
வலப் புறம் விநாயகரும், இடப்புறம் சுப்ரமணியரும் உள்ளனர். சிற்பங்கள் அனைத்தும் சிறிய அளவில் உள்ளன.
மேற்கோள்கள்
- ↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992