கும்பகோணம் பொய்யாத விநாயகர் கோயில்
கும்பகோணம் பொய்யாத விநாயகர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நெல்லுக்கடைத்தெருவில் உள்ள விநாயகர் கோயிலாகும். [1] இத்தெருவின் அருகே காவேரிக்கரைத்தெரு உள்ளது.
மூலவர்
மூலவராக விநாயகர் உள்ளார். அவர் பொய்யாத விநாயகர் எனப்படுகிறார்.
அமைப்பு
முன் மண்டபம், கருவறை, திருச்சுற்றுடன் உள்ள கோயில். சற்றே உயர்ந்த தளத்தில் உள்ளது.
குடமுழுக்கு
3 பிப்ரவரி 2016 காலை இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.[2]
மேற்கோள்கள்
- ↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992
- ↑ குடந்தையில் 3 கோயில்களில் மகா கும்பாபிஷேகம், தினமணி, 4 பிப்ரவரி 2016