கும்பகோணம் பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில்

கும்பகோணத்தில் உள்ள அனுமார் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [1] [2]

பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில்
22.10.2015 கும்பாபிஷேகம்

இருப்பிடம்

கும்பகோணம் நகரில் பெரியக் கடைத்தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் தொடங்கி இத்தெருவில் சரநாராயணப்பெருமாள் கோயில்,கூரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, ராஜகோபாலஸ்வாமி கோயில், கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன.

மூலவர்

கோயிலின் மூலவராக அனுமார் உள்ளார். சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசுவாமி ஆகியோருக்கு அந்தரங்கதாசனாக இருப்பதால் இம்மூவரும் திருவீதியில் வரும்போது இந்த இவருக்கு சடாரி மரியாதை செய்யப்படுகிறது. [3]

குடமுழுக்கு

இக்கோயிலில் அக்டோபர் 22, 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது. [3] [4]

மேற்கோள்கள்