கும்பகோணம் சோமேசர் கோயில்

தேவாரம் பாடல் பெற்ற
கும்பகோணம் சோமேசர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்குடந்தைக்காரோணம் ,குடந்தைக் காரோணம், குடமூக்கு, குடந்தை
பெயர்:கும்பகோணம் சோமேசர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சோமேசர், சோமநாதர், சிக்கேசர்
தாயார்:சோமசுந்தரி, தேனார்மொழியாள்
தீர்த்தம்:மகாமகத்தீர்த்தம், சோமதீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:நவராத்திரி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

அமைவிடம்

கும்பகோணம் சோமேசர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 28ஆவது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது திருக்குடந்தைக்காரோணம் என்றும், குடமூக்கு என்றும், குடந்தை என்றும் பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இக்கோயில் பொற்றாமரைக் கீழ்க்கரையில் உள்ளது.

வரலாறு

அமுத கும்பத்திற்கு ஆதாரமாயிருந்த சிக்கத்தில் (உறி) இருந்து தோன்றியவர். இதனால் சிக்கேசம் என்றும், பெருமானுக்கு சிக்கேசர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. சந்திரனுக்கு அருள் செய்ததால் சோமேசுவரர் என்றும், ஏழை சோமநாதர் என்றும், தேவிக்கு சோமசுந்தரி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. வியாழன் வழிபட்டதால் வியாழசோமேசர் என்ற பெயரும் உள்ளது. தீர்த்தம் : சோம தீர்த்தம், சந்திர புட்கரணி தீர்த்தம். இக்கோயிலில் நவராத்திரி சிறப்பாக நடைபெற்று வருகிறது.[1]

இறைவன், இறைவி

சோமேஸ்வரர், தாயார் தேனார் மொழியாள்.

குடமுழுக்கு

2009இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பெரும்பாலான கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் இக்கோயிலில் நவம்பர் 2, 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது.[2][3] 29 ஜனவரி 2016 அன்று கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.[4]

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

நவம்பர் 2, 2015 குடமுழுக்கு படத்தொகுப்பு