கும்பகோணம் சீராட்டும் விநாயகர் கோயில்
கும்பகோணம் சீராட்டும் விநாயகர் கோயில் கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் ஒன்றாகும்.[1]
இருப்பிடம்
இக்கோயில் கும்பகோணம் பேட்டைப் பஞ்சுக்காரத் தெருவில் உள்ளது.
மூலவர்
இக்கோயிலிலுள்ள விநாயகர் சீராட்டும் விநாயகர் என்றும் சீரட்ட விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். முன் மண்டபம், கருவறை, திருச்சுற்றுடன் இக்கோயில் உள்ளது.
பிற சன்னதிகள்
திருச்சுற்றில் துர்க்கையம்மன் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் இடப்புறம் லிங்கத்திருமேனி உள்ளது. அதற்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன.
குடமுழுக்கு
20 ஆகத்து 2015 அன்று விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழாவிற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கி, குடமுழுக்கு 21 ஆகத்து 2015அன்று நடைபெற்றது.[2]
மேற்கோள்கள்
- ↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992
- ↑ 2 கோயில்களில் மகா கும்பாபிஷேகம், தினமணி, 22 ஆகத்து 2015[தொடர்பிழந்த இணைப்பு]