கும்பகோணம் கற்பக விநாயகர் கோயில்
கும்பகோணத்தில் கற்பக விநாயகர் கோயில் என்ற பெயரில் மூன்று கோயில்கள் உள்ளன.
சோலையப்பன் தெரு
சோலையப்பன் தெருவில் ஒரு கற்பக விநாயகர் கோயில் உள்ளது.[1] இக்கோயிலின் மூலவராக விநாயகர் உள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு 6 டிசம்பர் 2015இல் நடைபெற்றது.[2]
ரயில் நிலையம்
மற்றொரு கற்பக விநாயகர் கோயில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ளது. இக்கோயிலின் மூலவராக விநாயகர் உள்ளார். இக்கோயிலின் குட முழுக்கு 23 அக்டோபர் 1969இல் நடைபெற்றது. 21 ஆகத்து 2015இல் மற்றொரு குடமுழுக்கு நடைபெற்றது.[3]
நாகேஸ்வரன் கோயில் கீழவீதி
நாகேஸ்வரன் கோயில் கீழவீதியில், ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் இடது புறமாக ஒரு கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலின் மூலவராக விநாயகர் உள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992
- ↑ கும்பகோணத்தில் ஐந்துகோயில்களில் குடமுழுக்கு, தினமணி, 7 டிசம்பர் 2015
- ↑ குடந்தையில் 2 கோயில்களில் மகா கும்பாபிஷேகம், தினமணி, 22 ஆகத்து 2015