கும்பகோணம் கற்பக மாரியம்மன் கோயில்

கும்பகோணம் கற்பக மாரியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காலசந்திக்கட்டளைத்தெருவில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.

நுழைவாயில்

மூலவர்

இக்கோயிலில் உள்ள மூலவர் கற்பகமாரியம்மன் ஆவார். மூலவர் உள்ள வேப்ப மரத்தின் அருகே வேல் உள்ளது. வேப்ப மரத்தில் தகடு பொருத்தப்பட்டுள்ளது.

சன்னதி

சன்னதியில் வலப்புறம் கன்னிசாமி, காத்தவராயன், லாடசாமியைக் குறிக்கும் மாடங்கள் காணப்படுகின்ன. அடுத்து மதுரை வீரனுக்கான மாடம் அவரது ஓவியத்துடன் உள்ளது. இடப்புறம் காளியம்மனுக்கான மாடம் உள்ளது. அதையடுத்து பதினெட்டாம்படி கருப்பசாமிக்கான மாடம் அவரது ஓவியத்துடன் காணப்படுகிறது.

மேற்கோள்கள்