கும்பகோணம் அரியலூர் மாரியம்மன் கோயில்

கும்பகோணம் அரியலூர் மாரியம்மன் கோயில் கும்பகோணத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் ஒன்றாகும். [1]

கோயில் முகப்பு

இருப்பிடம்

இக்கோயில் கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் உள்ளது.

மூலவர்

இக்கோயிலில் கருவறையில் மாரியம்மன் மூலவராக உள்ளார். பச்சைக்காளி, பவளக்காளி, மதுரை வீரன் ஆகியோர் இக்கோயில் வளாகத்தில் உள்ளனர்.

குடமுழுக்கு

30 சூலை 2014 அன்று பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் தொடங்கப்பட்டு, குடமுழுக்கு 27 ஆகஸ்டு 2015அன்று நடைபெற்றது. [1]

மேற்கோள்கள்