குமரவேல் பிரேம்குமார்
குமரவேல் பிரேம்குமார் (Kumaravel Premkumar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். 1993 ஆம் ஆண்டு சூன் மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த இவர் நீளம் தாண்டுதல் விளையாட்டில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடி வருகிறார். உட்புறம் மற்றும் வெளிப்புற நீளம் தாண்டுதல் போட்டிகள் இரண்டிலும் தேசிய சாதனை படைத்துள்ளார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய உட்புற தடகள வெற்றியாளர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | |||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 6 பெப்ரவரி 1993 தஞ்சாவூர், தமிழ்நாடு | |||||||||||||||||||||||||||||||
துணைவர்(கள்) | நீலோபர் | |||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | |||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | நீளம் தாண்டுதல் | |||||||||||||||||||||||||||||||
கழகம் | செயிண்ட் இயோசப் விளையாட்டு அகாதமி | |||||||||||||||||||||||||||||||
பயிற்றுவித்தது | இயேமி நியட்டோ | |||||||||||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | நீளம் தாண்டல் (வெளிப்புறம்): 8.09 (புது தில்லி 2013) நீளம் தாண்டல் (உட்புறம்): 7.92 (தோகா 2016) | |||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
இளமைப் பருவம் மற்றும் கல்வி
பிரேம்குமார் 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள கும்பகோணத்தில் பிறந்தார். தந்தை இறந்தபோது இவருக்கு ஒரு வயதாகும். அதன் பிறகு தாயார் உமா ராணியால் இவர் வளர்க்கப்பட்டார். உமா தன் குடும்பத்தைக் காக்க அவ்வூரில் உள்ள தேவாலயத்தில் வேலை பார்த்தார்.[1] பிரேம் தஞ்சாவூரில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் படித்தார். அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சுரேசு பிரேமின் திறமைகளைக் கண்டறிந்து தடகளப் போட்டிகளில் பங்கேற்க ஊக்கமளித்தார். இளைஞரான பிரேம் 2010 ஆம் ஆண்டு சென்னைக்கு சென்று பயிற்சியாளர் பி. நாகராசனிடம் பயிற்சி பெற்றார். பின் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி உயர் நிலைப்பள்ளியில் படித்தார். அங்கு முதன்மை விளையாட்டு அகாடமியில் சேர்ந்து பயிற்சியாளர் நாகராசனிடம் பயிற்சி பெற்றார். 2012 ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பள்ளிப் படிப்பை முடித்தார்.[2]
விளையாட்டு வாழ்க்கை
பிரேம்குமார் சென்னை, செயின்ட் இயோசப் விளையாட்டு அகடமியில் பி.நாகராசனிடம் பயிற்சி பெற்றார்.மே 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற மூத்தவர்களுக்கான 84 ஆவது மாநில தடகள போட்டியில் அகாதமி சார்பில் பங்கேற்று 7.75 மீட்டர் (25.4அடி) நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.[3] 2011 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் சென்னையில் நடைபெற்ற தென் மண்டல இளையோர் தடகள வெற்றியாளர் போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்டார். இப்போட்டியில் 7.52 மீட்டர் (24.7அடி) நீளம் தாண்டி புதிய இளையோர் சாதனை புரிந்து தங்கம் வென்றார்[4].
ஆசிய உட்புற தடகள சாம்பியன் போட்டி 2012 ஆம் ஆண்டு சீனாவின் காங்சூ, நகரத்தில் நடைபெற்ற போட்டியில் பிரேம் பங்கேற்றார். இப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, 7.62 மீட்டர் (25.0 அடி) தூரம் தாண்டி தேசிய உட்புற தடகள போட்டியில் சாதனைப் படைத்தார். ஆசிய உட்புற தடகள சாம்பியன் போட்டி, பட்டாயா தாய்லாந்து நாட்டில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மகா சிங் 7.49 மீட்டர் (24.6 அடி) தூரம் தாண்டி சாதணைப் படைத்தார்.[5] பிரேம் 7.62 மீட்டர் தூரம் தாண்டி முந்தைய மகா சிங் சாதணையை முறியடித்தார். இதனால் இப் போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.[2] பிறகு உலக இளையோர் சாம்பியன் போட்டி, பார்சிலோனா நகரில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் பங்கேற்றார். பிறகு எசுப்பானியா நகரில் நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டியில் 16 ஆவது இடத்தைப் பிடித்தார். அதில் பிரேம் சிறப்பாக தாண்டிய தூரம் 7.38 மீட்டர் (24.2 அடி) ஆகும். இது பிரேம் இறுதிப் போட்டிக்கு தேர்வுப் பெற போதுமானதாக இல்லை. தேசிய இடைநிலை-மாநில வெற்றியாளர் போட்டிகள் சென்னையில் 2013 ஆம் ஆண்டு சூன் மாதம் நடைபெற்றது.[6] இப்போட்டியில் பிரேம் தனது சாதனையான 8 மீட்டர் (26 அடி) தூரத்தைப் பிடித்தார். இப்போட்டிகளுக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன் போட்டிகள், புனே நகரில் நடைபெற்றது. இதில் பிரேம் வெள்ளிப் பதக்கம் பெற்று, தன்னுடைய சிறப்பான தூரமான 7.92 மீட்டர் (26.0 அடி) தூரத்தைத் தாண்டினார்.[6][7]
பிரேம்குமார் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக வெற்றியாளர் போட்டியில் விளையாட தகுதிபெற இயலவில்லை. இவருடைய 8.12 மீட்டர் (26.6 அடி) நீளம் தாண்டும் தூரம் உலக வெற்றியாளர் போட்டியில் விளையாட போதுமானதாக இல்லை. அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சி மையம், சுலா விசுடா நகரம் கலிபோர்னியா மாநிலத்தில் இப்போட்டி நடைபெற்றது. போட்டியில் காற்றின் மாற்றத்தால் ஒரு நொடிக்கு 2 மீட்டர் என்ற தூரத்தை எட்ட முடியாமல் இவருடைய தேசிய சாதனை மற்றும் தகுதிபெறும் முயற்சிகள் தோல்வியடைந்தன.[8][9] பின்னர் புது தில்லியில் நடைபெற்ற 79 ஆவது இரயில்வே தடகள வெற்றியாளர் போட்டிகளில் இவர் பங்கேற்று விளையாடினார். ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் 8.09 மீட்டர் (26.5 அடி) தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். 2002 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற 10ஆவது கூட்டமைப்பு தடகள கோப்பை வெற்றியாளர் போட்டியில் அமிர்தபால் சிங்கின் ஒன்பது வருட தேசிய சாதனையான 8.08 மீட்டர் (26.5 அடி) என்ற இலக்கை முறியடித்தார்.[10][11] சிங்கின் சாதனையை முறியடித்து வெற்றி பெற்றதால் பிரேம் சிறந்த தடகள வீரர் என அறிவிக்கப்பட்டார். மேலும் மார்சல் டிட்டோ கோப்பை பிரேம் குமாருக்கு வழங்கப்பட்டது.[12]
மேற்கோள்
- ↑ Kumaraswami, Lakshmi (8 September 2012). "Rural Rockstars: Kumaravel Premkumar". India Today. http://indiatoday.intoday.in/story/rural-rockstars-kumaravel-premkumar/1/216524.html.
- ↑ 2.0 2.1 Hardy, James (2 August 2012). "Chennai's Olympics hopefuls: Kumaravel Premkumar". The Times of India. Times News Network (Chennai) இம் மூலத்தில் இருந்து 9 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130809134630/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-02/chennai/32999949_1_national-record-national-camp-odd-jobs. பார்த்த நாள்: 9 August 2013.
- ↑ Record double for Suriya". The Hindu. Chennai. 23 May 2011. Retrieved 9 August 2013.
- ↑ Premkumar, Jessy steal the limelight". The Hindu. Chennai. 21 August 2012. Retrieved 9 August 2013
- ↑ "Kumaravel Premkumar wins bronze in Asian Indoor Athletics". Jagran Prakashan. 18 February 2012. http://post.jagran.com/Kumaravel-Premkumar-wins-bronze-in-Asian-Indoor-Athletics-1329588081. பார்த்த நாள்: 11 August 2013.
- ↑ 6.0 6.1 "Prem Kumar and Sudha Singh provides the silver-lining on the third day". Athletics Federation of India. 5 July 2013 இம் மூலத்தில் இருந்து 5 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130805030606/http://www.indianathletics.in/news.php. பார்த்த நாள்: 11 August 2013.
- ↑ "Sudha Singh fails to win gold, India slip to 6th in Asian Athletics Championships". Press Trust of India. Pune: NDTV. 5 July 2013. http://sports.ndtv.com/othersports/athletics/210346-sudha-singh-fails-to-win-gold-india-slip-to-6th-in-asian-athletics-championships. பார்த்த நாள்: 11 August 2013.
- ↑ "Heartbreak for long jumper Prem Kumar, wind-assisted 8.12 metres will not count". Press Trust of India. NDTV. 20 July 2013. http://sports.ndtv.com/othersports/athletics/211114-heartbreak-for-long-jumper-prem-kumar-wind-assisted-812-metres-will-not-count. பார்த்த நாள்: 11 August 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Selvaraj, Jonathan (6 August 2013). "Premkumar jumps 8.09 m, breaks nine-year-old long jump mark". The Indian Express (New Delhi). http://www.indianexpress.com/news/premkumar-jumps-8.09-m-breaks-nineyearold-long-jump-mark/1151611/. பார்த்த நாள்: 13 August 2013.
- ↑ "Prem Kumar leaps to a new mark". The Hindu. 6 August 2013. http://www.thehindu.com/todays-paper/tp-sports/prem-kumar-leaps-to-a-new-mark/article4994010.ece. பார்த்த நாள்: 13 August 2013.
- ↑ Mohan, K. P. (16 March 2004). "Amritpal betters Yohannan record". The Hindu (New Delhi) இம் மூலத்தில் இருந்து 3 ஜூலை 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040703105255/http://www.hindu.com/2004/03/17/stories/2004031707572000.htm. பார்த்த நாள்: 13 August 2013.
- ↑ "Prem Kumar adjudged Best Athlete in Rlys Championships, subject to dope test clearance". New Delhi: Indian Railways. 9 August 2013 இம் மூலத்தில் இருந்து 11 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130911034536/http://www.railnews.co.in/?p=12844. பார்த்த நாள்: 13 August 2013.