குமரகுருபரன் (கவிஞர்)
குமரகுருபரன் (1974 - சூன் 19, 2016) தமிழகக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் புகைப்படத்திற்கு நன்றி venuvanam.com. இவர் குமுதம், தினமலர், விண்நாயகம் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.[1] கனடா, தமிழ் இலக்கியத் தோட்டம் இவரது மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது என்ற நூலுக்கு 2015 ஆம் ஆண்டுக்கான கவிதைப் பரிசை வழங்கிக் கௌரவித்தது.[2]
குமரகுருபரன் (கவிஞர்)
இயற்பெயர்/ அறியும் பெயர் |
குமரகுருபரன் |
---|---|
பிறந்ததிகதி | 1974 |
பிறந்தஇடம் | திருநெல்வேலி, தமிழ்நாடு |
இறப்பு | 19 சூன் 2016 (அகவை 41–42) |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | கவிஞர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | தமிழ் இலக்கியத் தோட்ட விருது (2015) |
வாழ்க்கைக் குறிப்பு
குமரகுருபரன் தமிழ்நாடு, திருநெல்வேலியில் 1974 இல் பிறந்தவர்.[3] கால்நடை மருத்துவம் படித்தவர்.[4] அந்திமழை என்ற இதழுக்காக ஆனந்த விகடனின் சிறந்த மாணவ ஆசிரியர் என்ற விருதைப் பெற்றார்.[3] இதழியலில் ஏற்பட்ட ஆர்வத்தால்,[4] குமுதம், விண்நாயகன், தினமலர் ஆகிய இதழ்களில் பணியாற்றினார்.[3]
வெளிவந்த நூல்கள்
- ஞானம் நுரைக்கும் போத்தல் (கவிதைகள், 2014)
- மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது (கவிதைகள்)[5]
- இன்னொருவனின் கனவு (கட்டுரைத் தொகுப்பு)
- பயணிகள் கவனிக்கவும் (பயண நூல்)
விருதுகள்
- சிறந்த கவிதை நூலுக்கான தமிழ் இலக்கியத் தோட்ட விருது.[2]
- சிறந்த முதல் கவிதைத் தொகுப்புக்கான 2015 ராஜமார்த்தாண்டன் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது,[6] ஆனால் குமரகுருபரன் அதனை வாங்க மறுத்து விட்டார்.[1]
மறைவு
குமரகுருபரன் தனது 42வது அகவையில் 2016 சூன் 19 அன்று அதிகாலையில் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "கவிஞர் குமரகுருபரன் மறைவு". பத்திரிகை.காம். பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
- ↑ 2.0 2.1 "விடுபூக்கள் : கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்". தி இந்து தமிழ். 19 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
- ↑ 3.0 3.1 3.2 "இயல் விருது விழா 2015" (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2014.
- ↑ 4.0 4.1 "குமரகுருபரன் அஞ்சலி". பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
- ↑ "குமரகுருபரன் எழுதிய 'மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது' கவிதை நூலின் வெளியீட்டு விழா - shruti.tv". shruti.tv. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
- ↑ "குமரகுருபரனுக்கு ராஜமார்த்தாண்டன் விருது". பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.