குகன் இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். கங்கை ஆற்றின் கரையில் இருந்த சிருங்கிபேரபுரம் என்ற பகுதியின் நிசாதார்களின் மன்னர் ஆவார்.[1]

இராமர், சீதை மற்றும் இலக்குமணர்கள் சிரிங்கிபேரபுரத்திலிருந்து சித்திரகூடம் செல்வதற்கு, நிசாதார்களின் தலைவனான குகன் கங்கை ஆற்றைக் கடக்க படகோட்டி உதவி செய்தல்

வரலாறு

இராமன், சீதை மற்றும் இலக்குமணனுடன் 14 ஆண்டு வனவாசத்தை கழிக்கும் பொருட்டு, அயோத்தி நகரத்தை விட்டு வெளியேறி, கங்கை ஆற்றை கடப்பதற்கு முன்னர் மாலையில் குகனின் சிருங்கிபுரம் எனும் ஊரில் தங்கினர். அன்று இரவு இராமர் முதலானவர்களுக்கு உண்பதற்கு குகன் தேனும், மீனும் வழங்கி உபசரித்தார். மறுநாள் காலையில் கங்கை ஆற்றை கடக்க, குகன் தனது படகில் சீதை மற்றும் இராம-இலக்குமணர்களை அமர வைத்து, கங்கை ஆற்றின் மறு கரை வரை படகோட்டிச் சென்றார். பின்னர் இராமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, குகன் சித்திரகூடம் செல்லும் வழி கூறினார். இதனால் இராமருக்கு குகன் உற்ற தோழன் ஆனார். [2]

வனவாசம் சென்ற இராமரை காண்பதற்கு கங்கை ஆற்றின் கரைக்கு வந்த பரதன் முதலானவர்களுக்கும் கங்கை ஆற்றைக் கடக்க, குகன் படகுகளையும், படகோட்டிகளையும் தந்து உதவினார்.

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/index.php?title=குகன்&oldid=38490" இருந்து மீள்விக்கப்பட்டது