கீழ மாசி வீதி
கீழ மாசி வீதி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் மதுரை நகரில் உள்ள பரபரப்பான, வியாபார மற்றும் குடியிருப்புப் பகுதியாகும்.
கீழ மாசி வீதி | |
---|---|
பராமரிப்பு : | மதுரை மாநகராட்சி |
நீளம்: | 1 mi (2 km) |
ஆள்கூறுகள்: | 9°55′16″N 78°07′23″E / 9.9211°N 78.1230°E |
தெற்கு முனை: | விளக்குத்தூண் |
முதன்மை சந்திப்புகள்: | தெற்கு மாசி வீதி, வெண்கலக் கடைத் தெரு, அம்மன் சன்னதி தெரு, எழுகடல் தெரு, எழுகடல் அக்ரஹாரம் தெரு, மேலநாப்பாளையம் தெரு, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, வடக்கு மாசி வீதி, வடக்கு வெளி வீதி |
வடக்கு முனை: | மகாத்மா காந்தி சிலை |
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 186 மீட்டர் உயரத்தில், 9°55′16″N 78°07′23″E / 9.9211°N 78.1230°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கீழ மாசி வீதி அமையப் பெற்றுள்ளது.[1] தெற்கு வடக்காக நீண்டிருக்கும் இச்சாலையின் முக்கிய சந்திப்புகளாக தெற்கு மாசி வீதி, வெண்கலக் கடைத் தெரு, அம்மன் சன்னதி தெரு, எழுகடல் தெரு, எழுகடல் அக்ரஹாரம் தெரு, மேலநாப்பாளையம் தெரு, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, வடக்கு மாசி வீதி, வடக்கு வெளி வீதி ஆகியவை அமைந்துள்ளன.
ஆண்டு தோறும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் தேரோட்டம் அன்று சுவாமி தேர் மற்றும் அம்மன் தேர் ஆகியவை கீழ மாசி வீதி, வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி மற்றும் தெற்கு மாசி வீதி என நான்கு வீதிகளிலும் வலம் வருவது வழக்கம்.[1]
மதுரையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மை மண்டலங்களில் கீழ மாசி வீதி பகுதியும் ஒன்று.[2] 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகளில் ஒன்றான சாலைப் பணிகள் கீழ மாசி வீதி மற்றும் வடக்கு மாசி வீதிகளில் காலை நேரங்களில் மட்டும் நடைபெற்றன (இரவு நேரங்களில் சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் அனுமதி).[3]
கீழ மாசி வீதியில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோயில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4]
மேற்கோள்கள்
- ↑ "மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம் – மக்கள் வெள்ளத்தில் மாசி வீதிகளில் வலம் வந்த திருத்தேர்கள்!!". News18 Tamil. 2023-05-03. பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.
- ↑ Sanjana Ganesh (2018-04-01). "East Masi Street traders aghast at eviction drive". The Hindu (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-09-08.
- ↑ "மதுரை கீழ மாசி, வடக்கு மாசி வீதிகளில் காலையில் மட்டும் சாலை பணி மேற்கொள்ள முடிவு". Hindu Tamil Thisai. 2021-01-28. பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.
- ↑ "Arulmigu Karuppana Swamy Temple, Kela Masi Vethi, Madurai - 625001, Madurai District [TM031966].,Karuppanaswamy,Karuppanaswamy". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.