கீழ்வேளூர்
கீழ்வேளூர் (ஆங்கிலம்:Kilvelur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், கீழ்வேலூர் வட்டம் மற்றும் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் பேரூராட்சியும் ஆகும். இவ்வூரில் காவேரி ஆற்றின் கிளையாறான ஓடம்போக்கி ஆறு பாய்கிறது. கீழ்வேளூர் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
கீழ்வேளூர் | |||||||
அமைவிடம் | 10°45′58″N 79°44′28″E / 10.766°N 79.741°ECoordinates: 10°45′58″N 79°44′28″E / 10.766°N 79.741°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | நாகப்பட்டினம் | ||||||
வட்டம் | கீழ்வேளூர் | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
பெருந்தலைவர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
8,272 (2011[update]) • 2,068/km2 (5,356/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 4 சதுர கிலோமீட்டர்கள் (1.5 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/keelvelur |
அமைவிடம்
நாகப்பட்டினம் - திருச்சி நெடுஞ்சாலையில், நாகப்பட்டினம் நகரில் இருந்து மேற்கே 12 கி. மீ. தொலைவிலும், திருவாரூர் நகரில் இருந்து கிழக்கில் 13 கி. மீ. தொலைவிலும் அமைந்த கீழ்வேளூர் பேரூராட்சியில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே திருவாரூர் 13 கிமீ; மயிலாடுதுறை 51 கிமீ; திருத்துறைப்பூண்டி 30 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
4 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் வகைப்பாடு
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2151 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட கீழ்வேளூர் பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 8,272 ஆகும். அதில் ஆண்கள் 4,020 ஆகவும், பெண்கள் 4,252 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 849 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 89.82% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.87% ஆகவும், இசுலாமியர் 9.65% ஆகவும், கிறித்தவர்கள் 0.44% ஆகவும், பிறர் 0.05% ஆகவும் உள்ளனர்.[4][5]
கிழ்வேளூர் புதிய சட்டமன்ற தொகுதியாக 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2011 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக சதவீதத்தில் வாக்கு பதிவாகி உள்ளது (91.89%)
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kilvelur Population Census 2011
- ↑ http://www.townpanchayat.in/keelvelur/population