கீழைக்காற்று (சிற்றிதழ்)

கீழைக்காற்று இலங்கையிலிருந்து 1986ல் வெளிவந்த ஒரு இருமாத சஞ்சிகையாகும்.

முதல் இதழ்

முதல் இதழ் விசை 1 என்ற அறிவிப்புடன் ஜனவரி, பெப்ரவரி 1984இல் வெளிவந்தது.

பணிக்கூற்று

புரட்சிகர அரசியல் தத்துவ நடைமுறை, விமர்சன சஞ்சிகை

உள்ளடக்கம்

இதுவொரு முற்போக்கு இலக்கிய சஞ்சிகையாகக் காணப்பட்டது. மாவோ கம்யுனிச சித்தாந்தங்களை தெளிவுபடுத்தும் ஒரு இதழாகத் திகழ்ந்தது. கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுகள், துணுக்குகள் போன்ற பல்வேறுபட்ட கருத்தில் அமைந்த ஆக்கங்கள் இதில் உள்வாங்கப்பட்டிருந்தன. குறிப்பாக இந்திய இலங்கை அரசியல் உறவுகள் பற்றி அதிகளவிலான ஆக்கங்களைக் கொண்டிருந்தன. இதன் ஆரம்ப இதழின் விலை 3.50 சதமாகும்.