கி. பி. அரவிந்தன்

கி. பி. அரவிந்தன்
Aravinth-1.jpg
முழுப்பெயர் கிறிஸ்தோபர்
பிரான்சிஸ்
பிறப்பு 17-09-1953
பிறந்த இடம் யாழ்ப்பாணம்
மறைவு 08-03-2015
பாரிசு
பிரான்சு
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
கவிஞர்,
அரசியல் செயற்பாட்டாளர்
பெற்றோர் பேதுறு
மாசிலாமணி
வாழ்க்கைத் சுமத்திரி
துணை

கி. பி. அரவிந்தன் (17 செப்டம்பர் 1953 - 8 மார்ச் 2015), ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்தி வந்தார். புதினப்பலகை இணையத்தளத்தின் முக்கிய பங்காளர்.

அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. நெடுந்தீவைச் சேர்ந்த பேதுறு கிறிஸ்தோப்பர், மாசிலாமணி ஆகியோருக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். 1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். இவர் தோழர் சுந்தர் என்றும் ஈரோஸ் இயக்கத்தின் விடுதலைப் போராளியாக அறியப்பட்டவர். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன.

நூல்கள்

  • இனி ஒரு வைகறை (1991) - கவிதை - பொன்னி வெளியீடு
  • கனவின் மீதி (1999) - கவிதை - பொன்னி வெளியீடு
  • பாரிஸ் கதைகள் (2004) - சிறுகதை - அப்பால் தமிழ் வெளியீடு
  • முகம் கொள் (1992) - கவிதை - கீதாஞ்சலி வெளியீடு
  • மிச்சமென்ன சொல்லுங்கப்பா - ஒளி வெளியீடு

மறைவு

கி. பி. அரவிந்தன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பாரிசில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2015 மார்ச் 8 அன்று காலமானார். 1990 இல் இவருக்குத் திருமணமாகி மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=கி._பி._அரவிந்தன்&oldid=2564" இருந்து மீள்விக்கப்பட்டது