கி. நரேந்திரன்
கருமலைத்தமிழாழன் என்னும் புனைபெயரில் அறியப்படும் கி. நரேந்திரன் என்பவர் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வாழ்ந்துவரும் ஒரு தமிழ் மரபுக் கவிஞராவார்.[1]
வாழ்கை குறிப்பு
கி. நரேந்திரன் கிருட்டிணகிரி மாவட்டம், கிருட்டிணகியில் மு. கிருட்டிணன், இராசம்மாள் இணையருக்கு மகனாக 1951 யூலை 16 அன்று பிறந்தார். தமிழில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர் ஒசூர் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாரதிதாசனின் குயில் ஏட்டில் இவரது முதல் கவிதை 1969 இல் வெளியானது. அன்றுமுதல் தொடர்ந்து கவிதைகளை எழுதிவருகிறார். பல ஊர்களிலும், நாடுகளிலும் கவியரங்குகளில் கலந்துகொண்டுள்ளார். பல கவிதை நூல்களை எழுதியுள்ளார்.[2]
வெளிவந்த நூல்கள்
- கவிதை நூல்கள்
- நெஞ்சின் நிழல் (1976)
- மலர்விழி (காவியம் 1978)
- காவியத்தலைவன் (1978)
- காற்றை மணந்த கவிதைகள் (1995)
- நீர்க்கால்கள் (1998)
- ஒப்பனைப்பூக்கள் (1998)
- மண்ணும் மரபும் (1999)
- தமிழவேல் தமிழ்ப்பாவை (1999)
- வீணை மத்தளமாகிறது (2000)
- மரபின் வேர்கள் (2002)
- புதிய குறுந்தொகை (2003)
- வேரின் விழுதுகள் (2004)
- களம் வெல்லும் கலைஞர் (2005)
- சுவடுகள் (2008)
- உன்முகமாய் இரு (2010)
- அருள்மிகு மரகதாம்பிகை சந்திரசூடேஸ்ரர் பாமாலை (1997)
- கல்லலெழுத்து (2014)[3]
- செப்பேடு (2016)
- கால்முளைத்த கனவுகள் (2018)
- உரைநடை, ஆய்வு நூல்கள்
- புதுக்கவிதையில் தொன்மவியல் (1998 )
- பண்பில் வாடை (2001)
- திருக்குறள் (உரை, 2000)
- ஒசூர் அருள்மிகு மரகதாம்பிகை சந்திரசூரேஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு (2001)
விருதுகள்
- இவருக்கு தமிழ்நாடு அரசு 2016 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது வழங்கியுள்ளது.[4]
- மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 2017 ஆம் ஆண்டு சிந்தனைச் சிகரம் என்ற விருதினை வழங்கியது.
பரிசுகள்
- தமிழ் படைப்பாளிகள் சங்கம் 2013 ஆம் நடத்திய பொசுங்கட்டும் பொய்மை என்ற தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசை வென்றார்.
- பெங்களூர் தமிழ்ச் சங்கம் 2012 ஆம் ஆண்டு தைப்பொங்கலை ஒட்டி அயலகத் தமிழர் என்ற தலைப்பில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசை வென்றார்.
- இலண்டன் தமிழ்ச் சங்கம் உலக அளவில் புதுயுகத்தமிழர் என்ற தலைப்பில் நடத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசை வென்றார்.
- இலங்கை கல்குடாவில் இயங்கிவரும் தடாகம் கலை இலக்கிய வட்டம் உலக அளவில் இணையதளம் வழியாக 2015 மார்சில் ஈழம் என்ற தலைப்பில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசை வென்றார்.
குறிப்புகள்
- ↑ [1]
- ↑ "பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களுக்கு மலாயப் பல்கலைக்கழகம் பாராட்டு". பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
- ↑ "கல்லெழுத்து நூல் ஆசிரியர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் திறனாய்வு கவிஞர் இரா.இரவி". tamilthottam.forumta.net. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
- ↑ Admin. "பாவலர் கருமலைத்தமிழாழன் – Tamilnenjam". பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.