கி. சாவித்திரி அம்மாள்
கி. சாவித்திரி அம்மாள் (K. Savitri Ammal)(19 சூன் 1922 - 8 ஆகத்து 1973) என்பவர் இந்திய கோட்டு வாத்தியம் வீரர் ஆவார். இவர் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திருவரங்கம் ஐயங்காரிடம் கருநாடக இசைப்பாட்டினைப் பாடக் கற்கத் தொடங்கினார். பின்னர் கம்பங்குடி நாராயண ராவிடம் இசைக்கருவி வாசிக்கும் பயிற்சி பெற்றார். கொன்னக்கோலில் தேர்ச்சிபெற மன்னார்குடி வைத்தியலிங்கம் பிள்ளையிடம் இசையின் தாள அம்சங்களில் தேர்ச்சி பெறச் சிறப்புப் பயிற்சி பெற்றார். இவர் முதல் பெண் கோட்டுவாத்தியம் கலைஞர் ஆவார்.[1] 1968ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார்.[1][2][3]
கி. சாவித்திரி அம்மாள்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கி. சாவித்திரி அம்மாள் |
---|---|
பிறந்ததிகதி | 19 சூன் 1922 |
இறப்பு | 8 ஆகத்து 1973 |
அறியப்படுவது | இசைக்கலைஞர் |
விருதுகள்
1968ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது[1] விருதினைப் பெற்றார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Savitri Ammal, the first woman gottuvadyam artiste" (in en-IN). https://www.thehindu.com/entertainment/music/savitri-ammal-first-woman-gottuvadyam-artiste-sakharama-rao/article65586190.ece.
- ↑ THE INDIAN LISTENER: Vol. VII. No. 15. (22nd JULY 1942) (in English).
- ↑ "Tamil Nadu's Contribution To Carnatic Classical Music" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-03-02.